- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்தை வைத்து நான் படம் டைரக்ட் பணணப் போறேனா - எனக்கே இப்பதான் இந்த விஷயம்...

அஜீத்தை வைத்து நான் படம் டைரக்ட் பணணப் போறேனா – எனக்கே இப்பதான் இந்த விஷயம் தெரிய வருது என விழுந்து விழுந்து சிரித்த இயக்குநர்

- Advertisement -

முன்பெல்லாம் நாளிதழ்களில் வெள்ளிக்கிழமை அன்று, சினிமா நடிகர், நடிகையர் நடிக்கும் புதிய படங்கள் குறித்த அறிவிப்புகள், தகவல்கள் வெளியாகும். அதை படித்து ரசிகர்கள் தெரிந்துக்கொள்வர். ஒரு கட்டத்துக்கு பிறகு சினிமா வார இதழ்கள் மாத இதழ்கள் அதிகளவில் வெளியான நிலையில், சினிமா பற்றிய பல தகவல்களை ரசிகர்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் அபார வளர்ச்சி கண்டிருப்பதால், எந்த தகவலும் உடனுக்குடன் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களை சென்றடைகிறது. அதுவும் பேஸ்புக், வாட்சப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை வாயிலாக, பல ஆயிரக்கணகான தகவல்கள் உடனுக்குடன் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இதனால், மொபைல் போனை சில நிமிடங்கள் பார்த்தாலே, பல நூறு செய்திகளை அறிய முடியும்.

- Advertisement -

அறிவியலின் வளர்ச்சி பல நன்மைகளை ஏற்படுத்தி இருந்தாலும், அதில் தீமைகளும் நிறைய காணப்படுகின்றன. பத்திரிகைகள் மூலம் மக்களுக்கு கிடைத்த தகவல்கள், உறுதிசெய்யப்பட்ட நிறுவனங்களால் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டன. அதில் நிறைய நம்பகத்தன்மை இருந்தது. பத்திரிகையில் செய்திகள் உண்மையானவையாக மட்டுமே அன்றைக்கு இருந்தன.

இதற்கிடையே சமூக வலைதளங்களில் இன்று பரவும் பல தகவல்கள், ஆச்சரியம் மட்டுமின்றி அதிர்ச்சியும் அளிப்பவையாக இருக்கின்றன. அதுவும் சினிமா மீதான ஆர்வலர்கள், ரசிகர்கள் அதிகம் என்பதால் அடிக்கடி வதந்திகளை, புரளிகளை பலரும் கிளப்பி விடுகின்றனர். அதில் ஒன்றுதான் சமீபத்தில் வெளிவந்தது. மகிழ் திருமேனியின் விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படங்களை தொடர்ந்து அஜீத் நடிக்கும் படத்தை இயக்குநர் வெற்றி மாறன் இயக்குகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு தகவலை யார் மூலமோ கேட்டு, வெற்றிமாறன் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார். இதற்கான எந்த ஒரு பேச்சுவார்த்தையும், சந்திப்பும் நிகழாத நிலையில், இப்படி வதந்தியை கிளப்பி விட்டுள்ளார்களே, என அருகில் இருந்தவர்களிடம் ஜாலியாக கூறி இருக்கிறார்.

வெற்றிமாறன், நடிகர்களுக்கு கட்டுப்பட்ட இயக்குநர் அல்ல, அஜீத் போன்ற நடிகர்களிடம் வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குநர்கள் வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். ஸ்டார் ஹீரோக்களுக்காக, தங்கள் படைப்பாற்றலை வெற்றிமாறன் போன்றவர்கள் குறைத்துக்கொள்ள மாட்டார்கள் என்கின்றனர் விவரம் அறிந்த தமிழ் சினிமா ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்