சமீப காலமாக முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படங்கள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சில முன்னணி இயக்குனர்கள் பழைய படங்களின் கதைகளை திருட்டுத்தனமாக தங்களது கதைகளை போல் உருமாற்றி படங்களை ரசிகர்களுக்கு தந்து விடுகின்றனர்.
குறிப்பாக இயக்குனர்கள் அட்லி லோகேஷ் கனகராஜ் வெங்கட்பிரபு சுந்தர் சி போன்றவர்கள் இப்படி பழைய படங்களின் கதைகளை திருடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இவர்கள் இந்தி மலையாளம் தெலுங்கு கன்னடம் மற்றும் சில நேரங்களில் ஹாலிவுட் படங்களிலிருந்தும் கதைகளை சுட்டு தமிழ் படங்கள் எடுத்து விடுகின்றனர்.
ஆனால் முந்தைய காலத்தில் இது போன்ற தவறுகளை இயக்குனர்கள் செய்தால் ரசிகர்களால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இப்போது டிஜிட்டல் யுகத்தில் இன்டர்நெட் காலத்தில் ஒரு படத்தில் ஒரு காட்சியை வைத்து அந்த காட்சி வேறு ஏதேனும் படத்தில் வந்திருக்கிறதா என்பதை ரசிகர்கள் மிக எளிதாக கண்டுபிடித்து விடுகின்றனர்.
அதனால் இயக்குனர்கள் பழைய படங்களை சுட்டு புதிய படமாக்கி திரைக்கு கொண்டு வந்தால் அது ரசிகர்களால் கண்டுபிடிக்கப்பட்டு விடுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் டீசர் வெளியாகும் போதே அது எந்த படம் என்றும் ரசிகர்கள் மத்தியில் தகவல் பரவி விடுகிறது. இப்போது அது போன்ற ஒரு குற்றச்சாட்டு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தருமன் படத்திற்கும் எழுந்துள்ளது.
ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தர்மன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன் ராஷி கண்ணா மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு அனிருத் இசைமைக்கிறார்.
தர்மன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் டாக்டர் கேரக்டரில் நடிப்பதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து படத்தின் துவக்க விழாவில் ஓபனாக கூறியிருந்தார். இந்நிலையில் த குட் டாக்டர் என்ற ஹாலிவுட் தொடரின் காப்பிதான் தர்மன் என்று தகவல் வெளியானது. ஆனால் இதற்கு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மறுப்பு தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பேக் நியூஸ் – தவறான செய்தி என்றும் விளக்கம் தந்துள்ளார்.





