நடிகர் விஜய் தனது குடும்பத்தை விட்டு விலகிய நிலையில் சென்னை நீலாங்கரை பங்களாவில் தனித்து வாழ்ந்து வருகிறார். பகல் நேரங்களில் பனையூர் பங்களாவில் அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். விஜயின் மனைவி சங்கீதா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு அளித்த விவகாரம் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் பெரிய சூறாவளியை கிளப்பி உள்ளது.
இதற்கிடையே நடிகர் விஜய் நடிகை திரிஷாவை சென்னையில் நடந்த ஒரு திருமண வரவேற்பு விழாவுக்கு தன்னுடன் ஒரே காரில் அழைத்து வந்ததும் ஜோடியாக வந்து மணமக்களை வாழ்த்தியதும் இன்னும் இந்த விவகாரத்தில் எரிகிற நெருப்பில் நெய்யை வார்த்தது போல பெரிதாகி விட்டது.அதனால் நடிகர் விஜய் நடிகை திரிஷாவை இணைத்து சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.
இப்போது விஜய் திரிஷா ரகசிய திருமணம் செய்யப் போவதாகவும் ஒரு தகவல் பரவி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு நடிகை திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் செய்த ஒரு லைக் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. சமூக வலைதள பதிவு ஒன்றில் 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு விஜய் மற்றும் திரிஷா ஆகியோரின் திருமணம் நடைபெறலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த பதிவுக்கு திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் லைக் செய்ததாக தகவல் பரவியது. இதுதான் இந்த விவகாரத்துக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டதாக மாறியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் இதை ஒரு மறைமுகமான சிக்னலாகவே கருதி விஜய் திரிஷா திருமணம் குறித்து காரசாரமாக பேசி விவாதித்து வருகின்றனர். நடிகர் விஜய் இப்போது திரிஷாவுடன் கொண்டிருக்கும் நெருக்கமான நட்பு அவரது குடும்ப வாழ்க்கையில் மட்டுமின்றி அரசியல் வாழ்க்கைையிலும் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.
நடிகர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 20ம் தேதி நடக்கிறது. அரசியல் சார்ந்த கட்சி பணிகளில் தேர்தல் பிரசாரத்தில் விஜய் தீவிரம் காட்டி வரும் இந்த வேளையில், அவரை சுற்றி இத்தகைய விவகாரங்கள் சர்ச்சையாவது அரசியல் களத்தில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு பிறகு விஜய் திரிஷா திருமணம் நடக்கப் போவது உண்மையா என்பது குறித்து நடிகர் விஜய், நடிகை திரிஷா தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான விளக்கமும் தரப்படவில்லை. இது வெறும் வதந்தியா அல்லது இதில் உண்மை ஏதும் உள்ளதா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும். ஆனால் நிச்சயமாக தேர்தல் முடிவுக்கு பிறகு திரிஷா விஷயத்தில் விஜய் முக்கியமான முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.





