- Advertisement -
கடந்த திமுக ஆட்சியில் ஸ்டாலின் முதல்வராகவும் உதயநிதி துணை முதல்வராகவும் இருந்தார். அதே போல் இப்போது விஜய் முதல்வராக உள்ள நிலையில் துணை முதல்வர் யார் என்ற கேள்வி 5 மாதங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தனது அமைச்சர் எம்பி உள்ளிட்ட பதவிகளை திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். வருகிற இடைத்தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் போட்டியிட்டு ஜெயிக்க உள்ளதாகவும், தமிழக சட்டசபைக்குள் வரும் அவர் தான் தமிழ்நாட்டின் துணை முதல்வர் என்றும் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி முதல்வர் விஜயிடம் பேசி விட்டதாகவும் ஒரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தவெகவினர் அப்செட்டில் உள்ளனர்.





