தமிழ் சினிமாவில் இப்போது அடிக்கடி உச்சரிக்கப்படும் ஒரு பெயராக சாய் அபயங்கர் பெயர் மாறியிருக்கிறது. 20 வயதே இளம் இசையமைப்பாளர். சென்னையை சேர்ந்தவர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் மாதவன் நிவின் பாலி உள்ளிட்டோர் நடிக்கும் பென்ஸ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
மேலும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் அவரது 45வது படத்துக்கும் இசையமைப்பாளராக சாய் அபயங்கர்தான் கமிட் ஆகியிருக்கிறார். அந்த படத்தின் பெயர் கருப்பு என்று இன்று காலை தான் படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. பென்ஸ், கருப்பு ஆகிய படங்களை தொடர்ந்து அட்லி இயக்கும் பிரமாண்ட படத்திற்கும் சாய் அபயங்கர்தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அட்லி இயக்கும் ஒரு புதிய பிரமாண்ட படத்தை தயாரிக்கிறது. ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு சாய் அபயங்கர்தான் இசையமைக்கிறார்.
இப்போது சாய் அபயங்கர், தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க கமிட் ஆகி வரும் நிலையில், அவரை பற்றிய சில முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. சாய் அபயங்கர், இசையமைப்பாளர் அனிருத்தின் சிஷ்யர் என்பதும், அவருடன் பல படங்களில் பணிபுரிந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்துக்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற பின்னணி இசையில் பல இடங்களில் அனிருத்தின் சிஷ்யரான சாய் அபயங்கர்தான் இசையமைத்து உள்ளார். அதை பார்த்த நிலையில்தான், தனது படத்துக்கு அட்லி சாய் அபயங்கரை பிக்ஸ் செய்திருப்பதாக புதிய தகவல் கிடைத்திருக்கிறது.
இப்போதைய இளம் இசையமைப்பாளர்களில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் அனிருத். அவரிடம் பல படங்களில் பணிபுரிந்த சிஷ்யர் அவரிடம் தொழில் கற்ற சாய் அபயங்கர், இப்போது அவரை போலவே ஒரு வளரும் இசையமைப்பாளராக அட்லி ஆர்ஜே பாலாஜி பாக்யராஜ் கண்ணன் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.





