- Advertisement -
Homeபொழுதுபோக்குஇராமாயணா பாகம் 1ல் படத்தில் சீதா தேவி கேரக்டரில் நடித்த சாய்பல்லவி, பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பாரா?...

இராமாயணா பாகம் 1ல் படத்தில் சீதா தேவி கேரக்டரில் நடித்த சாய்பல்லவி, பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பாரா? அந்த சவாலை நேரடியாக சந்திப்பாரா?

- Advertisement -

சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள இன்றைய கால சூழ்நிலையில் பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் நடிகர்களின் தேர்வு அறிவிக்கப்படும் போதே சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்கள் அதிகரித்து நடிகர்களுக்கு அது பெரும் சவாலாக மாறிவிடுகிறது. சமீப காலமாக பல படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே கடுமையான இணைய வழி விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.

தற்போது இப்படி ஒரு சவாலை இராமாயணா பாகம் 1 படத்தின் விளம்பர பணிகளின் போது நடிகை சாய்பல்லவி சந்திக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த இதிகாசப் படத்தில் ஸ்ரீ ராமராக நடிக்கும் ரன்வீர் கபூருக்கு ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்காக வரும் அக்டோபர் மாதம் முழுவதும் நேர்காணல்கள் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு உள்ளிட்ட விளம்பர பிரமோசன்களை படக்குழு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. நடிகை சாய் பல்லவி தேர்வு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது அவர் சந்தித்த சமூக வலைதள விமர்சனங்கள் குறித்த கேள்விகளை அவர் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பது பெரிய பரபரப்பை உருவாக்கி உள்ளது.

நடிகை சாய் பல்லவி சீதாதேவி கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவர் அல்ல என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு பகுதியினர் சாய்பல்லவியை கடுமையாக விமர்சித்திருந்தனர். சிலரது கருத்துக்கள் கதாபாத்திர தேர்வு தாண்டி அவரது தோற்றத்தை குறிவைத்து மிகவும் மோசமான தோற்றம் கொண்ட சீதை என்று விமர்சிக்கும் அளவிற்கு சென்றது.

- Advertisement -

அவரது சுருட்டை முடியும் முகத்தில் பருக்களுடனும் சீதாதேவி இருந்தால் பார்க்க நன்றாக இருக்குமா என்று பலரும் விமர்சித்தனர். இந்த விமர்சனங்கள் சாய் பல்லவியை கடுமையாக பாதித்ததாக கூறப்படும் நிலையில் அவர் இதுகுறித்து பகிரங்கமாக பேசுவதை பெருமளவில் தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ள நிலையில் இந்த சர்ச்சைகள் விமர்சனங்கள் தொடர்பான கேள்விகள் அவரிடம் முன்வைக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

தனது சினிமா வாழ்க்கையிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் கதாபாத்திரங்களில் ஒன்றான சீதாதேவி கேரக்டர் குறித்த விமர்சனங்களையும் கேள்விகளையும் சாய்பல்லவி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும் சீதையாக சாய்பல்லவி நடித்ததற்கு பெரும்பாலான ரசிகர்களிடம் எதிர்ப்பும் எதிர்மறை விமர்சனமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்