அமரன் படத்தில் நடித்த பிறகு நடிகை சாய்பல்லவிக்கு தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பட வாய்ப்புகள் அதிகளவில் குவிந்து வருகிறது. ஆனால் தனக்கு பிடித்தமான தனக்கு அதிக முக்கியத்துவம் உள்ள தனது திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்பளிக்கிற கேரக்டர்களை மட்டுமே அவர் தேர்வு செய்து நடிக்கிறார்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த இந்து ரெபேகா வர்கீஸ் என்ற கேரக்டர் பெரிய அளவில் அவருக்கு ரசிகர்களிடம் ஒரு அங்கீகாரத்தை அடையாளத்தை பெற்றுத் தந்திருக்கிறது. அதனால் அந்த அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக மிக நல்ல அழுத்தமான கேரக்டர்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் சாய்பல்லவி இருந்து வருகிறார்.
அமரன் படத்தில் நடிக்கும் வரை சாய்பல்லவியின் சம்பளம் ரூ. 3 கோடியாக இருந்ததாகவும் அமரன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அவரது சம்பளம் ரூ. 8 கோடியாக உயர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதே போல் நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளமும் ரூ. 40 கோடியில் இருந்து ரூ. 75 கோடியாக அமரன் படத்துக்கு பின் உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர் வேணு எல்எண்டி. பலகம் என்ற ஹிட் படத்தை இயக்கிய அவர் அடுத்து எல்லம்மா என்ற படத்தை இயக்குகிறார். இது நாயகியை மையப்படுத்திய கதை. எல்லம்மா என்பதே நாயகியின் கேரக்டரை தான் குறிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் கதையை கேட்ட நடிகர் நானி, இது பவர்புல் கதை தான். ஆனால் நாயகியை மையப்படுத்திய இந்த கதையில் எனக்கு முக்கியத்துவம் இல்லை என்று இயக்குனரிடம் படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
அதன்பிறகு நானிக்கு பதிலாக அந்த படத்தில் நடிகர் நிதின் நடிக்க கமிட் செய்யப்பட்டார். மேலும் படத்தில் நாயகியாக எல்லம்மா கேரக்டரில் நடிக்க சாய்பல்லவியை அணுகிய போது, கதையை கேட்டு ஆச்சரியப்பட்ட சாய்பல்லவி உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் பேச்சுவார்த்தை ஓகே ஆன நிலையில் படத்தில் நடிக்க ஒப்பந்தம் எதுவும் எழுதப்படவில்லை.
இந்நிலையில் எல்லம்மா படத்தில் நடிக்க சாய்பல்லவி மறுத்த தகவல் வெளியாகி உள்ளது. இப்போது இராமாயணம் என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தி படத்தில் சீதையாக சாய்பல்லவி நடித்து வருகிறார். இதற்கிடையே எல்லம்மா என்ற கோபமான ஆக்ரோஷமான பெண்ணின் கேரக்டரில் நடித்தால் சீதையாக நடிக்கும் அமைதி கெட்டுவிடும். அந்த படத்தில் முழுமையான அமைதியை காட்ட முடியாது என்பதால் எல்லம்மா படத்தில் இருந்து விலகுவதாக கூறியிருக்கிறார். இப்போது எல்லம்மா படத்தில் நடிக்க நாயகியை மீண்டும் படக்குழு தேடி வருகிறது.





