தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் இருந்தாலும், அதில் கவர்ச்சிக்கு இடம் அளிக்க மறுத்து முழுக்க முழுக்க தனது நடிப்பை மட்டுமே அளித்து நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ரேவதி நதியா தொடரும் இந்தப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்து இருப்பவர் நடிகை சாய் பல்லவி.
தனது அசாத்திய நடனத் திறமையால், பலரது கவனத்தை ஈர்த்த சாய் பல்லவி மலையாளத்தில் எடுக்கப்பட்ட பிரேமம் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இங்கு சிலருக்கு மட்டும் தான் முதல் திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் கொண்டு சேர்க்கும்.
அப்படித்தான் சாய் பல்லவிக்கு அமைந்தது பிரேமம் திரைப்படம். அதில் அவர் தமிழ் பெண்ணாக மலர் டீச்சர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரேமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு அந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் மிக முக்கிய காரணம் என்றே கூறலாம்.
அளவான நடிப்பு, அங்கங்கே தனது நடனத்தின் திறமை, இறுதிக் காட்சியில் காட்டும் அந்த மௌனம் என மலர் டீச்சர் ஆகவே வாழ்ந்திருந்தார் சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தனது நடிப்பின் திறமையால் கால் பதித்தார் சாய் பல்லவி.
தனுஷ் உடன் அவர் மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜோடி சேர்ந்திருந்தார். அதில் இருவரும் இணைந்து ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடியது இப்போது வரை இணையத்தில் வலம் வருகிறது. சாய் பல்லவி நடித்த கார்கி திரைப்படமும், விமர்சன ரீதியாக கவனத்தைப் பெற்றது. தற்போது அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அவர் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில், பிரேமம் திரைப்படத்தில் நான் முதலில் நடிக்க மறுத்தேன். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு படத்தில் நடிக்க கூறினார். நான் அது ஏதோ ஸ்கேம் என்று நினைத்து நடிக்க மறுத்து விட்டேன். அப்போது அவர் நான் நேரம் எனும் திரைப்படத்தை இயக்கியிருப்பதாகவும், அதனைப் பாருங்கள் என்றும் தெரிவித்தார். இருப்பினும் மருத்துவ படிக்கும் பெண்ணை இவர்கள் ஏன் அணுக வேண்டும் என்று கேள்வி எழுந்தது. எனது குடும்பத்தினரும் தயக்கத்துடனே படத்தில் நடிக்க சம்மதம் கொடுத்தனர் என்று சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார்.





