- Advertisement -
Homeபொழுதுபோக்குஉலக கோடீஸ்வரர்கள் கொண்டாடும் பாலிவுட் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இப்படி ஒரு பிரச்னையா? -...

உலக கோடீஸ்வரர்கள் கொண்டாடும் பாலிவுட் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இப்படி ஒரு பிரச்னையா? – ஆனா அதை வெளிப்படையாக சொல்லிட்டாரே?

- Advertisement -

பாலிவுட் நடிகர்களில் சீனியர் நட்சத்திர நடிகராக இருப்பவர் அமிதாப் பச்சன். உலக கோடீஸ்வரர்கள் கொண்டாடும் டாப் ஸ்டார் நடிகராக இருந்து வருகிறார். இப்போது 80 வயதுகளை கடந்தும், விளம்பர படங்களில் தொடர்ந்து நடிக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் இப்போது நடித்துள்ள வேட்டையன் படத்திலும், அமிதாப் பச்சன் கேமியோ ரோலில், முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்திய சினிமாவின் அடையாளங்களில் மிக முக்கியமானவர் நடிகர் அமிதாப் பச்சன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் அபிஷேக் பச்சனும், இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார். அவரது மனைவி ஐஸ்வர்யா ராய், உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் என்று பெருமைக்குரியவர். இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.

- Advertisement -

தமிழில் ஐஸ்வர்யா ராய் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ், எந்திரன், மணிரத்னம் இயக்கிய இருவர், பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன், ராஜிவ் மேனன் இயக்கிய கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்யாசத்தில் பரபரப்பான வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் பாராட்டி தங்களது வாழ்த்துகளை வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

இதுகுறித்து ஒரு பதிவை வெளியிட்டு பாலிவுட் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய இறுதிப் போட்டியை நான் பார்க்கவில்லை. ஒரு வழியாக உற்சாகமும், அச்சமும் நிறைந்த இந்த போட்டி நிறைவடைந்து விட்டது. இந்த போட்டியை நான் டிவியில் பார்க்கவில்லை. நான் பார்த்தால் இந்தியா தோற்றுவிடும் என்பதாலேயே நான் பார்க்கவில்லை, என்று கூறியிருக்கிறார்.

இது, வழக்கமாக பலருக்கும் இருக்கிற சென்டிமென்ட் தான். சிலர் கிரிக்கெட் பார்த்தால், இந்திய அணி ஜெயிக்காது. அதே போல், சிலர் வேட்பாளர் யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் அவர் ஓட்டுப் போட்டால் அந்த வேட்பாளர் ஜெயிக்க மாட்டார் போன்ற சென்டிமெண்டுகள் சிலருக்கு இருக்கிறது. அதே போல் நான் கிரிக்கெட் பார்த்தால், இந்திய அணி ஜெயிக்காது என்று தனது சென்டிமென்டை பாலிவுட் சீனியர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனே கூறியது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்