- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயுடன் அப்படி ஒரு ஆசை எனக்கு இருக்கிறது, வெளிப்படையாக பேசிய நடிகை சாய்பல்லவி -...

நடிகர் விஜயுடன் அப்படி ஒரு ஆசை எனக்கு இருக்கிறது, வெளிப்படையாக பேசிய நடிகை சாய்பல்லவி – தளபதி இதை கொஞ்சம் கவனிங்க…

- Advertisement -

மலையாளத்தில் பிரேமம் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நிவின் பாலிக்கு காதலியாக இந்த படத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். முதல் படமே பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது. அவரது நடனமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து தமிழில் சூர்யாவுடன் என்ஜிகே தனுஷூடன் மாரி 2 மற்றும் கார்கி படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். கடந்தாண்டில் சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தில் நடித்தார். இந்து ரெபேகா வர்கீஸ் என்ற கேரக்டரில் சாய்பல்லவி நடிப்பு பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

- Advertisement -

அமரன் படத்தின் வெற்றிக்கு சிவகார்த்திகேயன் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நாயகியாக நடித்திருந்த சாய்பல்லவியின் அழுத்தமான கேரக்டரும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இப்போது சாய்பல்லவி, நாக சைதன்யாவுடன் தண்டேல் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சாய்பல்லவியை பொருத்த வரை நடிப்பு நடனம் முகபாவனை கேரக்டரை உள்வாங்கி நடிக்கும் தன்மை என எல்லாவிதங்களிலும் ஒரு அழுத்தமான நடிப்பை தரும் நடிகையாக உள்ளார். அதனால் அவர் கவனமாக தனது கேரக்டர்களை தேர்வு செய்தும் நடிக்கிறார்.

- Advertisement -

தமிழ் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டுமின்றி இப்போது ராமாயணம் என்ற இந்தி படத்தில் சீதை கேரக்டரில் சாய்பல்லவி நடித்து வருகிறார். தண்டேல் பட பிரமோசன் நிகழ்சசி ஒன்றில் சாய்பல்லவி சமீபத்தில் பங்கேற்றார். அப்போது யாருடன் போட்டி நடனம் ஆட விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

இதுகுறித்து பதிலளித்த நடிகை சாய்பல்லவி, யார் ஒருவர் நடனத்தை விரும்பி ரசித்து ஆடுகிறார்களோ, அவர்களுடன் நான் நடனமாட விரும்புகிறேன். எப்போதும் நான் நடிகர் விஜய் நடனத்தை மிகவும் விரும்பிப் பார்ப்பேன் என்று கூறியிருக்கிறார். விஜயுடன் நடனமாட சாய்பல்லவி விரும்புகிறார். தனது கடைசி படம் ஜனநாயகன் படத்தில் ஒரு பாடல் நடனத்துக்கு சாய்பல்லவியை அழைத்தால், சிறப்பாக இருக்கும். சாய்பல்லவியின் ஆசையை விஜய் கொஞ்சம் கவனிக்கலாமே என ரசிகர்கள் சிபாரிசு செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்