- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் இந்தி பட உலகில் தனுஷ்... நடிகருடன் ஜோடி சேரும் பிரபல நடிகை... தலைவனுக்கு எங்கேயோ...

மீண்டும் இந்தி பட உலகில் தனுஷ்… நடிகருடன் ஜோடி சேரும் பிரபல நடிகை… தலைவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்குயா என உணர்ச்சி வசப்படும் ரசிகர்கள்…

- Advertisement -

கோலிவுட் மட்டுமல்லாமல், பாலிவுட், ஹாலிவுட் கொடிகட்டி பறக்கும் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், அடுத்த திரைப்படமான காதல் கொண்டேனில் தனது முழு நடிப்பையும் வெளிப்படுத்தி அசர வைத்தார். அன்றைய தேதியில் தனுஷின் நடிப்பை பார்த்து வியந்த இயக்குனர் பாலுமகேந்திரா, அவரை தனது இயக்கத்தில் அது ஒரு கனாக்காலம் படத்தில் நடிக்க வைத்தார்.

யதார்த்தம் கலந்து தனுஷின் நடிப்பு பலரது இதயத்தில் ஒட்டியதால், அவருக்கென ரசிகர் பட்டாளம் அதிகரிக்க ஆரம்பித்தது. குறிப்பாக, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அத்தனை திரைப்படங்களிலும் தனுஷை வேறொரு கோணத்தில் நம்மால் பார்க்க முடிந்தது.

- Advertisement -

பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் இளைஞனாக பொல்லாதவன் திரைப்படத்தில் தொடங்கி, பொறுப்பு மிக்க தந்தையாக குடும்பத்தைக் காக்க போராடும் அசுரன் படம் சிவசாமி கதாபாத்திரம் வரை அனைத்திலும் தூள் கிளப்பு இருந்தார் தனுஷ். இதில் ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படங்களில், தனுஷின் நடிப்பு ஆகச்சிறந்ததாக அமைய, அவருக்கு தேசிய விருது தேடி வந்தது.

தனுஷின் நடிப்பை கண்டு வியந்த பாலிவுட் திரையுலகம் அவரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், தனுஷ் – சோனம் கபூர் நடிப்பில் உருவான ராஞ்சனா திரைப்படம், 2013 ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அந்த காலங்களில், பாலிவுட்டில் உள்ள அத்தனை ஹீரோக்களும் சிக்ஸ் பேக் உடன் முறுக்கிய கட்டுமஸ்தான உடல் கட்டமைப்பில் திரிந்தனர்.

- Advertisement -

ஆனால் இந்த பக்கம் ஒல்லியான உடல் கட்டமைப்புடன் இந்தி உலகிற்கு புதிதாக அறிமுகமான தனுஷ், பலரையும் கவனிக்கச் செய்து ரஞ்சனாவில் வெற்றி கொடி நாட்டினார். பின்னர் ஷமிதாப், அத்ராங்கி ரே திரைப்படங்களிலும் அவர் நடித்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆனந்த் எல் ராயுடன் தெறி இஸ்க் மெயின் படத்தில் தனுஷ் இணைந்து இருக்கிறார்.

தற்போது தனுஷ் தனது ஐம்பதாவது படத்தில் நடிப்புடன் சேர்த்து இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், இதன் சூட்டிங் நிறைவடைந்த பிறகு இந்தி திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கும் இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் தனுஷ் சேகர் எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், இதன் படபிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்