- Advertisement -
Homeபொழுதுபோக்குஅல்லு அர்ஜுன் உடன் இணையும் அட்லி... கம் பேக் கொடுக்கும் ரசிகர்களின் விருப்பமான நடிகை...

அல்லு அர்ஜுன் உடன் இணையும் அட்லி… கம் பேக் கொடுக்கும் ரசிகர்களின் விருப்பமான நடிகை…

- Advertisement -

சினிமாவில் குறைவான திரைப்படங்கள் கொடுத்தாலும் புகழின் உச்சிக்கு வரை சென்றவர் இயக்குனர் அட்லி. அவரது இயக்கத்தில் இதுவரை ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஜவான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இதில் விஜயை வைத்து அவர் இயக்கிய மூன்று திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றன. இதன் தாக்கத்தால், இந்தி திரை உலகிற்கு அட்லி சென்றார். அங்கும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ஜவான் திரைப்படத்தை அவர் இயக்க, அந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியது.

- Advertisement -

ஆனால் இந்த திரைப்படத்திலும், பல எதிர்ப்புகளை அட்லீ எதிர்கொண்டார். குறிப்பாக, ஜவான் திரைப்படம் பல்வேறு திரைப்பட காட்சிகளை சுட்டு வைத்து எடுத்திருப்பதாக ரசிகர்கள் கூறினர். குறிப்பாக தமிழில் வெளியான பெரும்பாலான திரைப்படங்களின் சாயல் ஜவான் திரைப்படத்தில் இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதேசமயம் தமிழ் ரசிகர்களின் விமர்சனம் ஹிந்தியில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அங்கு ஷாருக்கான் ரசிகர்கள் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர். இதனால் ஆயிரம் கோடி ரூபாயை கடந்து அந்த திரைப்படம் சாதனை புரிந்தது.

- Advertisement -

இப்படியான சூழலில் தனது அடுத்த திரைப்படத்தில் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைத்து நடிக்க வைக்க முயற்சித்து வருவதாக அட்லி கூறி இருந்தார். ஆனால் தற்போது அது நடக்காமல் போன சூழலில், அவர் அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் இணைந்து இருக்கிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் பணிகள் முடிந்த பிறகு அட்லி படத்தின் வேலைகள் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்க உள்ளாராம். உடல்நல பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்களாக அவர் நடிப்பை விட்டு விலகி இருந்தார். இப்படியான சூழலில் அவர் மீண்டும் படங்களில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்