- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி இருப்பது ரொம்பவும் கஷ்டம்தான், ஆனா என்னை மாதிரி நீங்களும் அப்படி இருங்க - தனது...

அப்படி இருப்பது ரொம்பவும் கஷ்டம்தான், ஆனா என்னை மாதிரி நீங்களும் அப்படி இருங்க – தனது ரசிகர்களுக்கு நடிகை சமந்தா சொன்ன அட்வைஸ்!

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்தியில் சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் சமந்தா நடித்திருக்கிறார். அதற்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து தெலுங்கு தமிழ் படங்களில் சமந்தா கமிட் ஆகி பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

கடந்த 2017ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மகன் நாக சைதன்யாவை சமந்தா காதல் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் 4 ஆண்டுகளில் அவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த 2021ம் ஆண்டில் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இப்போது நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை 2வது திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

ஆனால் நடிகை சமந்தா 2வது திருமணம் செய்துக்கொள்ளவில்லை. முரட்டு சிங்கிகளாக தான் சினிமாவில் வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். அவ்வப்போது சில நடிகர்கள் இயக்குனர்களுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டாலும் அவர் தரப்பில் இருந்து அவரது 2வது திருமணம் குறித்த எந்த தகவலும் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

இதற்கிடையே மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா பல மாதங்களாக தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டார். இப்போது அந்த நோயில் இருந்து அவர் முழுமையாக மீண்டு வந்துள்ள நிலையில், சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வப்போது தனது வலைதள பக்கத்தில் ஏதேனும் கருத்துகளை, தனது புகைப்படங்களை வீடியோக்களை சமந்தா பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை செய்துள்ள நடிகை சமந்தா அதில் கூறியிருப்பதாவது, நான் 3 நாட்களாக மொபைல் போனை பயன்படுத்தாமல் அதை விட்டு விலகி இருந்தேன். 3 நாட்களும் மௌனமாக இருந்தேன். மொபைல் போனை தொடவே இல்லை. யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை. என்னோடு நான் மட்டுமே இருந்தேன்.

நம்மோடு நாம் தனியாக இருப்பது மிகவும் கஷ்டமானது. ரொம்பவும் பயங்கரமானது. ஆனால் இப்படி மௌனமாக இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். பல மில்லியன் தடவைகள் இப்படி தனியாக இருக்கும்படி சொன்னாலும் நான் இருப்பேன். நீங்களும் இப்படி இருக்க முயற்சி செய்யுங்கள் என்று, அந்த பதிவில் நடிகை சமந்தா தனது ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

சற்று முன்