- Advertisement -
Homeபொழுதுபோக்குபக்தி சார்ந்த படங்களை இயக்குவதால் இப்படி ஒரு விமர்சனமா? தன்னை பற்றிய சர்ச்சைக்கு ஓபனாக பதில்...

பக்தி சார்ந்த படங்களை இயக்குவதால் இப்படி ஒரு விமர்சனமா? தன்னை பற்றிய சர்ச்சைக்கு ஓபனாக பதில் தந்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி!

- Advertisement -

ரேடியோ ஜாக்கியாக அறிமுகமாகி பிறகு ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்தவர் ஆர்ஜே பாலாஜி. நான் ஸ்டாப்பாக மூச்சு விடாமல் படபட என பேசும் அவரது ஸ்டைல் மக்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை அவருக்கு கொடுத்தது.

அதன்பிறகு சினிமாவில் காமெடி கேரக்டர்களில் ஆர்ஜே பாலாஜி நடிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவர் ஹீரோவாகவும் மாறினார். எல்கேஜி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஆர்ஜே பாலாஜி பிறகு வீட்ல விசேஷம் மூக்குத்தி அம்மன் சொர்க்கவாசல் சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார்.

அவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மூக்குத்தி அம்மன் கேரக்டரில் நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இப்போது நடிகர் சூர்யா திரிஷா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்த படத்தில் நடிகர் சூர்யா திரிஷாவுடன் மலையாள நடிகர் இந்திரன்ஸ் ஷிவதா சுவாசிகா நட்டி நடராஜ் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த 15ம் தேதி வெளியான இந்த படம் இதுவரை 250 கோடி ரூபாய் வசூலைக் கடந்து பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதையடுத்து மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு ஆர்ஜே பாலாஜி 18 அடி உயரத்தில் அரிவாள் சாத்தி நேர்த்திக்கடன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடவுள்களை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு படம் இயக்குவதால் ஆஜே பாலாஜியை சங்கி என்று சமூகவலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து பிரஸ்மீட்டில் பங்கேற்ற இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, என்னை பாஜக ஆர்எஸ்எஸ் தொண்டன் திமுக ஆதரவாளன் என்று என்னென்னமோ சொல்கிறார்கள். ஆனால் பொது மக்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும்.

படத்தின் ரிலீஸூக்கு முந்தைய நாள் எனக்கே தெரியாமல் ஒரு வீடியோவில் நான் உடைந்து அழுதுவிட்டேன். சூர்யா சாரும் நானும் வெற்றி பெற வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் எங்களை வாழ்த்தியது. அதனால் மக்களின் உண்மையான உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது. இணையத்தில் பகிரப்படும் சில விஷயங்கள் எதார்த்தத்திற்கு முற்றிலும் சம்மந்தம் இல்லாதது போல் தோன்றுகிறது. நான் மக்களின் அன்பை மட்டும் தான் தேடுகிறேன் என்று இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார்.

சற்று முன்