- Advertisement -
Homeபொழுதுபோக்குபடப்பிடிப்பு தளத்தில் திடீர் ஆவேசம் காட்டிய இயக்குனர் வெற்றிமாறன், பெண்டு கழண்டு போச்சே என புலம்பிய...

படப்பிடிப்பு தளத்தில் திடீர் ஆவேசம் காட்டிய இயக்குனர் வெற்றிமாறன், பெண்டு கழண்டு போச்சே என புலம்பிய படக்குழுவினர் – என்ன கொடுமை சார் இது?

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான படம் விடுதலை. காமெடி நடிகர் சூரி கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரிலும் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இசைஞானி இளையராஜா இசையில் வழிநெடுக காட்டுமல்லி… என பாடல்களும் செம ஹிட் ஆகின. இந்த படம் முதல் பாகமாக வெளிவந்த நிலையில், 2ம் பாகத்துக்காக ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

ஆனால் 1.5 ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில், இன்னும் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங் நடந்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஒரு மாதம், இரண்டு மாதம் என இழுத்து இழுத்து, இப்போது முதல் பாகம் விடுதலை படத்தின் கதையே மறந்து விடும் அளவுக்கு தாமதம் நீடிப்பதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

- Advertisement -

ஒரு வாரம், பத்து நாட்கள் படப்பிடிப்பை நடத்துவது, பிறகு சில நாட்கள் இடைவெளி விடுவது, மீண்டும் நடத்துவது, கேரக்டர்களின் கிளை கதைகளை நீடிப்பது என அடிக்கடி மாற்றங்களும், திருத்தங்களும் செய்வதில் வெற்றிமாறன் தீவிரம் காட்டுவதால் படப்பிடிப்பு நீண்டுக்கொண்டே போகிறது. இப்போது தென்காசியில் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கடந்த வாரத்தில், திடீரென 3 நாட்கள் ஷூட்டிங் லீவ் விட்ட வெற்றிமாறன், அந்த 3 நாட்களும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே ஸ்கிரிப்ட்டை திருத்தி, மாற்றி எழுதினார் என பரபரப்பாக பேசப்பட்டது. இப்படி ஷூட்டிங்கில் எல்லோரும் இருந்தாலும் பணி செய்யாமல், அவர் ஸ்கிரிப்ட் எழுதி கொண்டிருந்தால் நேர விரயம், படத் தயாரிப்பாளருக்கு பண விரயம் என்ற விமர்சனங்களும் எழுந்தது.

- Advertisement -

ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்று இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது தொடர்ந்து 3 நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை என படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் வெற்றிமாறன். இப்படி தினமும் 17 மணி நேரம் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்.; 3 நாட்கள் இப்படியே போனதால், படப்பிடிப்பு குழுவினர், பெண்டு கழண்டு போய் விட்டனர். சரியான தூக்கமின்றி, ஓய்வின்றி பணி செய்ததால் மனச்சோர்வு, உடல் சோர்வில் தவித்துள்ளனர்.

அதன்பிறகு, இயக்குனர் வெற்றிமாறனிடம் இதுகுறித்து பேசி, படப்பிடிப்புக் குழுவினருக்கு ஓய்வு தேவை, தொடர்ந்து தினமும் 17 மணி நேரம் பணிசெய்ய மிகவும் சிரமப்படுகின்றனர் என்று எடுத்துக் கூறிய பிறகு, ஒரு நாள் மட்டுமே ஷூட்டிங் ஸ்பாட் லீவ் விட்டுள்ளார் வெற்றிமாறன். அந்த ஒரு நாள் முழு ஓய்வுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் இப்படி எல்லாம் வெற்றிமாறன் ஆவேசம் காட்டினாலும், விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதி எனக்கே தெரியாது என்கிறாரே, என்ன கெொடுமை சார் இது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்