- Advertisement -
Homeபொழுதுபோக்குகைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்திக்கு ஜோடியாக வருவது இந்த ஹீரோயினா... அட அந்த ரோலுக்கு...

கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்திக்கு ஜோடியாக வருவது இந்த ஹீரோயினா… அட அந்த ரோலுக்கு பெயரும் வெச்சாச்சா…

- Advertisement -

தற்போது கூலி திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். வரும் 14ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில் அதன் வெற்றிக்காக படக்குழு காத்திருக்கிறது. அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியானது. மொத்தம் மூன்று நிமிடங்கள் இருக்கும் வகையில் இந்த ட்ரெய்லர் ஒளிபரப்பப்பட்டது.

ஆனால் இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நறுக்கென்று எந்த இடத்திலும் பஞ்ச் டயலாக்குகள் இல்லாமல், ஒரு சாதாரண முன்னோட்டமாகவே இது அமைந்தது. மிகப்பெரும் அளவில் முன்னோட்டத்தை எதிர்பார்த்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இது சற்று ஒரு ஏமாற்றத்தை கொடுத்தது.

- Advertisement -

இருப்பினும் முன்னோட்டத்தை பார்க்கும் போதே இதன் கதைக்களம் வேறு லெவலில் இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். சயின்டிஃபிக் தொடர்பான காட்சிகளும் இதில் இருப்பதாக சொல்கின்றனர். முன்னோட்டத்தில் ரஜினிகாந்தில் இருந்து சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜூனா, அமீர்கான் என அனைவரையும் அறிமுகப்படுத்திவிட்டார்கள்.

அனிருத்தின் பின்னணி இசை நன்றாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள். இது இப்படி இருக்க, தனது அடுத்த திரைப்படத்திற்கான வேலையில் இறங்க தயாராகி வருகிறார் லோகேஷ் கனகராஜ். நடிகர் கார்த்தியை வைத்து அவர் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்க இருக்கிறார். ஏற்கனவே இதன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை தொட்டது.

- Advertisement -

கோடிக்கணக்கிலான போதை பொருளை கைப்பற்றி ஒரு இடத்தில் பதிக்க வைத்திருக்கும் காவல்துறை, அந்த போதைப் பொருளை அடையத் துடிக்கும் வில்லன் கும்பல், இதற்கு நடுவே காவலர்களுக்கு உதவுவதற்காக களம் இறங்கும் ஹீரோ என ஒரே இரவில் நடக்கும் கதையை விறுவிறுப்பு குறையாமல் சொல்லி இருப்பார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, விக்ரம் திரைப்படத்தை இயக்கி, எல் சி யு கான்செப்ட்டை அறிமுகப்படுத்தினார்.

இப்படியான சூழலில்தான் அவர் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதால் அதன் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது கைதி கதையின் தொடர்ச்சியாக இல்லாமல் அதன் முந்தைய பாகமாக எடுக்கப்பட இருக்கிறது. இதில் கார்த்திக்கின் மனைவியாக விஜி என்னும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், நடந்தால் நன்றாக இருக்குமே என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்