- Advertisement -
Homeபொழுதுபோக்குசாய் அபயங்கரை கிண்டல் செய்தாரா இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்? - இதில் ஷான் ரோல்டன் பெயரும்...

சாய் அபயங்கரை கிண்டல் செய்தாரா இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்? – இதில் ஷான் ரோல்டன் பெயரும் சிக்கிடுச்சே?

- Advertisement -

திரைப்பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகர் மன்னர் முத்து இருவரும் இணைந்து சமீபத்தில் மன்னாரு என்ற பாடலை வெளியிட்டனர். இந்த பாடல் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் மன்னர் முத்துவிடம் பேசும் சந்தோஷ் நாராயணன், மன்னாரு பாடல் ஹிட் ஆகிவிட்டதால் அதன் அன்ப்ளக்டு பதிப்பை உருவாக்கப் போவதாக கேலியாக கூறுகிறார். தொடர்ந்து இந்தப் பாடலின் ஒப்பாரி பதிப்பு என்று குறிப்பிட்டு ஒரு மெட்டை அவர் இசையமைத்து காட்டுகிறார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து சோசியல் மீடியாவில் சர்ச்சை வெடித்தது.

- Advertisement -

பாடல்கள் ஹிட்டான பிறகு அதன் அன்ப்ளக்டு பதிப்புகளை பதிவிடும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரை மறைமுகமாக கேலி செய்யவே சந்தோஷ் நாராயணன் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார் என்று தகவல் பரவியது.இதுகுறித்து பல விவாதங்களும் எதிர்மறை விமர்சனங்களும் இணையத்தில் வைரலானது.

இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதமாக சந்தோஷ் நாராயணன் அந்த பதிவின் கமெண்ட் பகுதியில் விளக்கம் தந்துள்ளார். அதில் இங்கு கூடியுள்ள அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அன்ப்ளக்டு ஒன்றை உருவாக்க முயலும் எனது சொந்த முயற்ச்சியை நானே நகைச்சுவையாக கேலி செய்துக் கொண்ட சுய பகடி வீடியோ தான் அது.

- Advertisement -

இது சாய் அபயங்கரையோ அல்லது வேறு யாரையோ இலக்கு வைத்து பதிவிடப்பட்டது அல்ல. எனக்கு சாயின் இசை பிடிக்கும். அவருக்கு என் ஆதரவு என்றும் உண்டு. மேலும் நான் யாரையாவது சுட்டிக்காட்ட விரும்பினால் அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளிப்படையாக பேசுவேன் என்றும் சந்தோஷ் நாராயணன் தெளிவுபடுத்தி உள்ளார். மேலும் அந்த பதிவில் சிரிக்கும் எமோஜி கமெண்ட் செய்திருந்த இசையமைப்பாளர் ஷான் ரோல்டனையும் நெட்டிசன்கள் விட்டு வைக்கவில்லை.

இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் விளக்கம் தந்துள்ள அவர், நான் வழக்கமாக இணைய கருத்துக்களை படிப்பதில்லை. ஆனால் பலர் என்னை விமர்சனங்களுடன் டேக் செய்ததால் விளக்கம் அளிக்கிறேன். சந்தோஷை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். இது வெறும் ஜாலியான உரையாடலே தவிர இதில் எந்த வன்மமும் இல்லை. கலைஞர்களான எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் வெறுப்பு இல்லை. அனைவரும் இதை ஒரு ஜாலியான நிகழ்வாக எடுத்துக்கொண்டு அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ஷான் ரோல்டன் அதில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்