- Advertisement -
Homeபொழுதுபோக்குநெருங்கும் தமிழக சட்டசபை தேர்தல்… நடிகர் சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு - இது பெரிய...

நெருங்கும் தமிழக சட்டசபை தேர்தல்… நடிகர் சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு – இது பெரிய டிவிஸ்ட்டா இருக்குதே என ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் சரத்குமார். சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். நாட்டாமை சூரியவம்சம் நட்புக்காக சூரியன் சேரன் பாண்டியன் போன்ற படங்கள் சரத்குமாருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன. இவர் சினிமா தயாரிப்பாளராகவும் இருந்தார்.

நடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவை காதலித்து 2வது திருமணம் செய்துக்கொண்டார். நடிகை ராதிகாவுக்கு சரத்குமாரை 3வது கணவராக ஏற்று திருமணம் செய்துக்கொண்டார். இதற்கிைடையே கடந்த 1996ம் ஆண்டில் நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.

- Advertisement -

ஆனால் சினிமாவில் வெற்றி பெற்ற அளவுக்கு சரத்குமாருக்கு தமிழக அரசியலில் பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைக்கவில்லை. அதனால் அரசியல் களத்தில் சரத்குமார் பெரிய அளவில் கவனமும் பெற முடியவில்லை. இதனால் பாஜக கட்சியுடன் தனது சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் இணைத்து விட்டதாக கூறினார்.

இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் நடிகர் சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் எம்பி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதே தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் தோல்வியடைந்தார்.

- Advertisement -

இப்போது சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நடிகர் சரத்குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற சட்டசபை தேர்தலில் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார் உள்பட அவர் குடும்பத்தினர் யாரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்பதை திட்டவட்டமாக நடிகர் சரத்குமார் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் சரத்குமார் கூறியதாவது, வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் நானும் என் மனைவியும் என் குடும்பம் சார்ந்த யாரும் போட்டியிட மாட்டோம். அதற்கு பதிலாக என்னுடன் இத்தனை ஆண்டுகாலமாக பயணித்த என் கட்சி சார்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவேன். குறைந்த பட்சம் 5 பேர் வரை என்னுடைய ஆதரவாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவார்கள். அவர்களது நலனே எனக்கு முக்கியம் என்று நடிகர் சரத்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்