- Advertisement -
Homeபொழுதுபோக்குடூரிஸ்ட் பேமிலி என ஆங்கிலத்தில் டைட்டில் வைத்தது ஏன்? - படத்தின் கதாநாயகன் சசிக்குமார் தந்த...

டூரிஸ்ட் பேமிலி என ஆங்கிலத்தில் டைட்டில் வைத்தது ஏன்? – படத்தின் கதாநாயகன் சசிக்குமார் தந்த அதிரடி விளக்கம்!

- Advertisement -

நடிகர் சசிக்குமார் தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக தயாரிப்பாளராக வலம் வருகிறார். அவர் இயக்கிய முதல் படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தில் நாயகனாகவும் அவர் நடித்திருந்தார். ஜெய் சமுத்திரக்கனி கஞ்சா கருப்பு ஸ்வாதி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் நடிகர் சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருந்தார்.

தொடர்ந்து சமுத்திரக்கனி டைரக்ட் செய்த நாடோடிகள் படத்தில் சசிக்குமார் நாயகனாக நடித்தார். பரணி விஜய் வசந்த் கஞ்சா கருப்பு ராஜா அபிநயா அனன்யா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாஸ் ஹிட் படமாக அமைந்தது. இந்த 2 படங்களுமே சசிக்குமாருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அடையாளத்தை அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.

- Advertisement -

தொடர்ந்து சுந்தரபாண்டியன் குட்டிப்புலி கொடிவீரன் உடன் பிறப்பே பேட்ட போன்ற பல படங்களில் நடித்த சசிக்குமாருக்கு அயோத்தி படம் பெரிய கவனத்தை ஏற்படுத்தி தந்தது. அதே போல் சமீபத்தில் வெளியாகி திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் டூரிஸ்ட் பேமிலி படமும் நல்ல வெற்றியை கொடுத்திருக்கிறது.

நடிகர் சசிக்குமாருக்கு மனைவியாக இந்த படத்தில் சிம்ரன் நடித்திருக்கிறார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவு கிடைத்திருக்கிறது. இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து சென்னையில் குடியேறும் சசிக்குமார் சிம்ரன் குடும்பத்தை மையப்படுத்திய இந்த கதை எமோஷனல் பீலிங் கதைக்களத்தில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

- Advertisement -

ஆனால் இந்த படத்துக்கு தமிழில் டைட்டில் வைக்காமல் டூரிஸ்ட் பேமிலி என ஆங்கில டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் குட் பேட் அக்லி ரெட்ரோ தக்லைஃப் படங்களின் வரிசையில் டூரிஸ்ட் பேமிலி என இந்த படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த படத்தின் கதாநாயகன் நடிகர் சசிக்குமார் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, தமிழில் பெயர் வைப்பதை நாங்கள் தவிர்க்கவில்லை. தற்போது படங்களை ஓடிடியில் விற்கிறோம். 3 மொழிகளில் ஓடிடியில் படத்தை விற்கும் போது ஆங்கிலத்தில் தலைப்பு வைக்க வேண்டியுள்ளது. தமிழில் மட்டும் இல்லாமல் படத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்படுகிறது. முன்பு தமிழில் படத்தின் பெயர் வைத்தால்தான் வரிச்சலுகை உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை என்று நடிகர் சசிக்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்