- Advertisement -
Homeபொழுதுபோக்கு25 நாட்களில் தாய்கிழவி படத்தின் வசூல் நிலவரம் - ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான...

25 நாட்களில் தாய்கிழவி படத்தின் வசூல் நிலவரம் – ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான படம் இத்தனை கோடிகளை கடந்து விட்டதா? திக்குமுக்காடிய கோலிவுட்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரடக்சன்ஸ் சார்பில் தயாரித்த படம் தாய்கிழவி. அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராதிகா சரத்குமார் பவுனுத்தாயி என்ற கேரக்டரில் தாய்கிழவியாக நடித்திருந்தார். மேலும் அருள்தாஸ் சிங்கம்புலி பால சரவணன் மரியம் ஜார்ஜ் இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் ஆரம்பம் முதலே பெரிய வரவேற்பையும் மக்களின் கவனத்தையும் பெற்ற நிலையில் முதல் நாளிலேயே கணிசமான வசூலை அள்ளியது. தொடர்ந்து தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் இருந்து வருவதால் படம் வெளியான 10 நாட்களிலேயே ரூ. 50 கோடிக்கு மேல் வசூலை கடந்து விட்டது.

- Advertisement -

தாய்கிழவி படத்தை பொருத்த வரை கதையின் நாயகியாக வரும் ராதிகா சரத்குமாரின் அழுத்தமான நடிப்பும் அவரது கெட்டப்பும் கேரக்டரும் பெரிய அளவில் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டது. படத்தின் ஆரம்பம், இறுதி காட்சிகளில் மட்டுமே ராதிகா நடிக்கும் காட்சிகள் உள்ளன. மற்றபடி அவர் படுக்கையில் நோயாளியாக தான் காட்டப்படுகிறார்.

எனினும் அவரை மையப்படுத்திய கதையில் அவரது மகன்கள் அவரது சொத்துக்கு ஆசைப்படும் காட்சிகள்தான் திரைக்கதையாக பயணிக்கிறது. அதில் வரும் காமெடி காட்சிகளும் கமல் ரசிகராக வரும் சிங்கம்புலி படம் முழுக்க கமல் பாடல்களை ஒலிக்க விடுவதும் படத்தை சுவாரசியமாக கொண்டு செல்கிறது.

- Advertisement -

மேலும் இந்த படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு தயாரிப்பாளராக இறங்கி வேலை செய்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பிரமோசன் நிகழ்ச்சிகளை நடத்தினார். முன்னணி நடிகர் நடிகைகளுக்கு பிரிவியூ காட்சி நடத்தி அவர்கள் மூலமும் படத்துக்கு நல்ல வைப்பை கொண்டு வந்து ரசிகர்களிடம் விளம்பரப்படுத்தினார்.

ஆனாலும் சரக்கு தரமாக இருந்தால்தான் வியாபாரம் ஆகும் என்பதை போல படம் பார்த்த ரசிகர்களுக்கு தாய்கிழவி போதிய திருப்தியும் பொழுதுபோக்கு அம்சங்களையும் தந்ததால் இந்த படம் இதுவரை கணிசமான வசூலை அள்ளியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி ரிலீஸான தாய்கிழவி 25 நாட்களில் ரூ. 75 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என்று பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்