தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகிகளாக பல ஆண்டுகளாக வலம் வரும் நடிகைகள் திரிஷா மற்றும் நயன்தாரா. கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர்கள் இன்னும் 25 ஆண்டுகளான நிலையில் கதாநாயகிகளாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா திருமணம் செய்துக்கொண்ட நிலையில் நடிகை திரிஷா இன்னும் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தயாரிப்பாளருடன் திரிஷாவுக்கு நடக்க இருந்த திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று போய் விட்டது. இப்போது 40 வயதுகளை கடந்தும் திரிஷா திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு டான்ஸ் கற்றுத் தருபவர் டான்ஸ் மாஸ்டர் கலா. ஏராளமான படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிசெய்துள்ளார். டான்ஸ் மாஸ்டர் கலாவின் சகோதரி பிருந்தா. இவரும் டான்ஸ் மாஸ்டர்தான். பல படங்களில் நடிகர் நடிகைகளுக்கு டான்ஸ் பயிற்சி தந்தவர். நடிகர் கமல்ஹாசன் நடித்த நம்மவர் என்ற படத்தில் நடிகர் நாகேஷின் மகளாக பிருந்தா நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற டான்ஸ் மாஸ்டர் பிருந்தா நடிகைகள் நயன்தாரா மற்றும் திரிஷா குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அப்போது பிருந்தா கூறியதாவது, ஒருநாள் இரவில் நான் திரிஷா நயன்தாரா 3 பேரும் ஒரே காரில் இருந்தோம். விடிய விடிய காருக்குள் இருந்தபடியே நாங்கள் பேசிக்கொண்டு இருந்தோம்.
அப்போது சில இடங்களுக்கு காரில் சென்றும் வந்தோம். இப்படியே அதிகாலை 5 மணி ஆகிவிட்டது. அதனால் என்னை வீட்டில் கொண்டு போய் விட்டு விடுங்கள் என்று அவர்களிடம் நான் சொன்னேன். உடனே திரிஷாவும் நயன்தாராவும் சரி வாங்க போவோம் என்று சொல்லிவிட்டு வேறு பாதையில் காரை ஓட்டிச்சென்றனர். பயந்து போன நான், என்ன கார் வேற ரூட்டில் போகிறது என்று பதட்டமாக கேட்டேன்.
அதற்கு அவர்கள் இருவரும், எங்களுக்கு மட்டும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவ்வளவு கஷ்டமான நடன ஸ்டெப்புகளை கொடுப்பீர்களா? இனி அப்படி கொடுக்க மாட்டேன் என்று சொல்லுங்க. அப்படி சொன்னால் தான் வீட்டில் கொண்டு வந்து விடுவோம் என்று மிரட்டினார்கள். அப்போது வேறு வழியின்றி நானும் சரி என்று சொன்னேன். அப்புறம்தான் காரில் இருந்த என்னை வீட்டில் கொண்டு போய் விட்டார்கள் என்று டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கூறியிருக்கிறார்.





