- Advertisement -
வாரண்ட் வெப் சீரிஸ்சில் நடித்த இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் இப்போது பூவே உனக்காக என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே இயக்குனர் சீமான் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள நிலையில் திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார். சமீபத்தில் எல்ஐகே படத்தில் நடித்த அவர் இப்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் படத்திலும் அவரது அண்ணனாக நடித்து வருகிறார். மேலும் பூவே உனக்காக படத்திலும் சீமான் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை குஷ்புவும் நடிக்கிறார். இதில் சீமான் குஷ்பு கணவன் மனைவியாக நடிக்கிறார்களா, அல்லது ஹீரோ ஹீரோயின் அப்பா அம்மா என நடிக்கிறார்களா என்பது உறுதியாகவில்லை.





