ஆரம்பத்தில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சீமான். பிறகு மாதவன் நடித்த தம்பி பிரபு நடித்த பாஞ்சாலங்குறிச்சி மற்றும் பசும்பொன் சத்யராஜ் நடித்த வீரநடை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சீமான். பிறகு பள்ளிக்கூடம் மாயாண்டி குடும்பத்தார் எவனோ ஒருவன் அடுத்து வர உள்ள எல்ஐகே உள்ளிட்ட பல படங்களில் சீமான் நடித்திருக்கிறார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய சீமான் தொடர்ந்து அரசியல் களத்தில் இருந்து வருகிறார். திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய கொள்கை பாதையில் சீமான் அரசியல் களத்தில் நின்று பேசி வருகிறார்.
ஆனால் அவர் சட்டசபை தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்களில் கணிசமான குறிப்பிட்டு வாக்கு சதவீதம் பெற்றாலும் அவரது கட்சி சார்பில் இதுவரை ஒருவர் கூட எம்எல்ஏவாக எம்பியாக தேர்தலில் ஜெயித்தது இல்லை. ஒவ்வொரு முறையும் தேர்தல் களத்தில் தனித்து நின்று ஒரு ரூபாய் கூட வாக்காளர்களுக்கு தராமல் ஓட்டுகளை பெறும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் சட்டசபை தேர்தலில் சீமான் வழக்கம் போல தனித்து களத்தில் நிற்கிறார். எந்த கூட்டணி ஆதரவும் இல்லாமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த முறை திமுக அதிமுக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி தமிழக வெற்றிக் கழகம் கட்சி குறித்தும் அதன் தலைவர் நடிகர் விஜய் குறித்தும் கடுமையாக சீமான் பேசி வருகிறார்.
சமீபத்தில் நடந்த நாதக கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, செந்தில் பாலாஜி டாஸ்மாக் ஊழல் பண்ணி சம்பாதிக்கிறார் என்று விஜய் பேசினார். ஆனால் எப்போதாவது டாஸ்மாக்கை மூடுவேன் என்று விஜய் பேசி இருக்கிறாரா? விஜயின் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் டாஸ்மாக் கடை நடத்தி வருகிறார்கள். அதைப் பற்றி விஜய்க்கு எந்த பிரச்சனையும் இல்லையா?
கடந்த 15 வருடங்களாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டி போராடுகிறேன். நேற்று வரை நடிகைகளுடன் ஆட்டம் போட்டுவிட்டு இன்று கட்சி தொடங்கினால் ஆட்சியை விஜய்க்கு தூக்கி கொடுப்பார்களா? முதலில் விஜய்க்கு தைரியம் இருந்தால் நான் நிற்கும் இடத்தில் என்னுடன் போட்டியிட்டு அந்த தொகுதியில் ஜெயிக்கட்டும் என்று சீமான் சவால் விட்டு பேசியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





