நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், சீசன் 7 டைட்டில் வின்னராக ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா வெற்றி பெற்றார். ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையுடன் கார் உள்ளிட்ட பல பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற 2வது பெண் போட்டியாளர் இவர்.
கடந்த அக்டோபர் 1ம் தேதி, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, விஜய் டிவியில் துவங்கியது. இதில் பிரபல திரைப்பட நடிகையாக போட்டியில் பங்கேற்றவர் நடிகை விசித்ரா. கூல் சுரேஷ், யுகேந்திரன் போன்றவர்களும் அறிமுகமானவர்கள். மட்டுமே மற்றவர்கள் எல்லாம் சினிமாவில் சில நிமிடங்கள் வந்து செல்லும் சின்ன ரோல்களில் நடித்தவர் மட்டுமே. சீரியல் நடிகர், நடிகையர் இம்முறை அதிகமாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தனர்.
முதலில் 18 பேர் போட்டியாளர்களாக களத்தில் இறக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு வாரம் கழித்து ஒயில்டு கார்டு போட்டியாளர்களாக 5 பேர் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். மாயா, விசித்ரா, மணி சந்திரா, அர்ச்சனா, கானா பாலா, நிக்சன், ரவீணா, அனன்யா, ஐசு, பூர்ணிமா, யுகேந்திரன், கூல் சுரேஷ், ஜோவிகா, வினுஷா, பவா செல்லத்துரை என மொத்தம் 23 பேர் வீட்டுக்குள் அனுப்பபட்டனர்.
முதலில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டவர் விசித்ரா. அவர்தான் வெற்றியாளராக அதிக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. ஏனென்றால், இதுவரை 35 வயதுக்கு உட்பட்டவர்களே டைட்டில் வின்னரான நிலையில், இந்த முறை 50 வயது நெருங்கிய விசித்ராவுக்கு வாய்ப்புதர பிக்பாஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் பரவியது.
ஆனால் திடீரென விசித்ரா எலிமினேட் ஆகி விசித்ரா, பிக்பாஸ் வீட்டில் இருந்து 2 வாரங்களுக்கு முன் வெளியேறினார். அதற்கு முன்னதாக, ரூ. 16 லட்சம் பெட்டி பணத்துடன் பூர்ணிமாவும் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். இது பலத்த குழப்பத்தை, ஏமாற்றத்தை பார்வையாளர்களுக்கு தந்தது.
இதற்கிடையே மாயா, அர்ச்சனா, மணிசந்திரா, தினேஷ் பெயர்களும் வின்னர் லிஸ்ட்டில் அடிபட்டன. நேற்று முன்தினம் மணிசந்திரா வின்னர், தினேஷ் வின்னர் என்று இணையத்தில் யாரோ கிளப்பிவிட அதுவும் வைரலானது. இதற்கிடையே மாயா தான் வின்னர் என கமல்ஹாசன் முடிவு செய்துவிட்டதாகவும் சிலர் கொளுத்திப் போட அதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அர்ச்சனாவுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பு, இருப்பதிலேயே அவர்தான் பெஸ்ட் போட்டியாளராக பிக்பாஸ் வின்னர் செலக்சன் கமிட்டியும் முடிவு செய்த நிலையில், அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டார்.





