பொதுவாகவே பலரிடம் உருவக்கேலி செய்யும் வழக்கம் இருக்கிறது. குண்டாக இருந்தால் ஒல்லியாக இருந்தால் தலையில் முடி இல்லாமல் போனால் ஏதேனும் ஒரு வார்த்தைகளில் அவர்களை கிண்டல் செய்வார்கள். அதனால் தான் கவுண்டமணி சந்தானம் போன்றவர்கள் பேசிய உருவக்கேலி வசனங்கள் பெரிய அளவில் அவர்களுக்கு ஒர்க் அவுட் ஆனது.
அதே போல் உருவத்தை கேலி செய்யும் விதமான தோற்றத்தில் இருந்த பல நடிகர்கள் சினிமாவில் நடிக்க வாய்ப்பும் தரப்பட்டது. அந்த வகையில்தான் குமரிமுத்து ஓமக்குச்சி நரசிம்மன் தயிர்வடை தேசிகன் பகோடா காதர் உசிலை மணி தாடி பாலாஜி பிந்துகோஷ் குள்ளமணி தவக்களை என பல நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தார்கள்.
ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் ஒருவரை உருவக்கேலி செய்வது நியாயம் அல்ல. தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பதை போல ஒருவரது உருவத்தை வைத்து கேலி செய்வதும் ஒரு குற்றம்தான். ஆனால் சில நடிகர்கள் தங்களது படங்களில் உருவக்கேலியை தவிர்த்து காமெடி காட்சிகளை தருவதில் மிக கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிக்க வந்த போது அவரை எலும்பன் நரம்பன் ஒல்லிப்பிச்சான் நாக்குப்பூச்சி நடிகர் என்றெல்லாம் பட்டப் பெயர் வைத்து கிண்டல் செய்தார்கள். திறமைக்கும் உடல் தோற்றத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அவர் தனது நடிப்பால் நிரூபித்து காட்டினார். தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் இப்போது இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஓம் படத்தை தொடர்ந்து லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நாயகியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மமிதா பைஜூ பெயர்கள் அடிபட்ட நிலையில் இப்போது பிளாஸ்ட் இதயம் முரளி படங்களில் நடித்த ப்ரீத்தி முகுந்தன் தான் கதாநாயகி என்று சொல்லப்படுகிறது. டான் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
நடிகர் தனுஷ் நடிக்கும் இந்த படத்துக்கு நரம்பன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. நரம்பன் என்பது உருவக்கேலி செய்யப்படும் ஒரு பெயர்தான். எனினும் தனது ஆரம்பகால உடல் தோற்றத்தை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி தரும் விதமாக நரம்பன் என டைட்டில் வைக்க தனுஷ் ஓகே சொன்னதாக தெரிய வருகிறது. இதில் ஒரு கூத்தாடி கேரக்டரில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.





