நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். ஒரு படத்தில் நடிக்க ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகர் விஜய்தான். அவர் நடித்த படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வணிக ரீதியான மிகப்பெரிய வரவேற்பை வசூலை குவித்து விடுகிறது. அதனால் விஜய் நடித்த படங்கள் என்றாலே அது ரசிகர்களுக்கு திருவிழா தான். தயாரிப்பாளர்களுக்கும் கல்லா செமையாக கட்டி விடுகிறது.
ஆனால் சினிமா வேண்டாம் என்று முடிவு செய்த நடிகர் விஜய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய நிலையில் இப்போது சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அத்துடன் சீமானின் நாம் தமிழர் கட்சி என மும்முனையுடன் நான்காவது முனையாக விஜயின் தவெக கட்சியும் தேர்தல் களத்தில் நிற்கிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் மனைவி சங்கீதா, விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மேலும் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் தனது கணவர் விஜய் இருப்பதாகவும் அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். இது தமிழக மக்கள் மத்தியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
அப்போது நடிகர் விஜயின் மனைவி குறித்து தவெக கட்சி சார்ந்தவர்கள் மிகவும் கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் இணையத்தில் விமர்சனம் செய்தனர். விர்ச்சுவல் வாரியர்ஸ் எனப்படும் டிவிகே கட்சி சார்ந்தவர்கள் சங்கீதா குறித்து தாறுமாறாக மீம்ஸ் போட்டு அசிங்கப்படுத்தினர். இதற்கு இயக்குனர் அமீர் கூட கண்டனம் தெரிவித்து இருந்தார். ஆனால் விஜய் இதற்கு எந்த கண்டிப்பும் செய்யவில்லை.
ஆனால் நேற்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் என்பவர், தவெகவில் உள்ள பெண்கள் குறித்து சில கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார். அது சராசரி மனிதர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியாத மிக மோசமான தரம் கெட்ட விமர்சனம் என்ற நிலையில் தவெக தலைவர் நடிகர் விஜய் இதுகுறித்து சென்னை போலீஸ் டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் பொன்ராஜ் மீது புகார் அளித்தார்.
இதுகுறித்து நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை விஜய் மீது இப்போது வைத்து வருகின்றனர். தாலி கட்டி தன்னுடன் 26 ஆண்டுகள் வாழ்ந்த மனைவி, தனது 2 பிள்ளைகளை பெற்று வளர்த்த மனைவி சங்கீதா குறித்து தனது கட்சி சார்ந்தவர்களே மிக கேவலமாக பேசும்போது அமைதியாக வேடிக்கை பார்த்த தலைவர் விஜய்க்கு, இப்போது மட்டும் ரோஷம் வந்து விட்டதா? இந்த வேகமும் ரோஷமும் மனைவி சங்கீதா விஷயத்தில் எங்கே போனது? என்று கோபமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.





