நடிகர் ரஜினிக்கு அண்ணாத்த தர்பார் லால் சலாம் வேட்டையன் கூலி என பல படங்கள் தோல்வியை தந்துவிட்டது. ஆனால் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியானது. இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இன்னொரு பாட்ஷா தான் ஜெயிலர் என்றும் பேசப்பட்டது.
இப்போது ஜெயிலர் படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். ரம்யா கிருஷ்ணன் மிர்ணா மேனன் சிவராஜ்குமார் மோகன்லால் ஆகியோருடன் 2ம் பாகத்தில் விஜய் சேதுபதி, சந்தானம் எஸ்ஜே சூர்யா பாலிவுட் நடிகை வித்யாபாலன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். மேலும் தெலுங்கு நடிகர் பாலய்யாவும் நடித்துள்ளார்.
ஜெயிலர் படத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். இவர்தான் பிரதான வில்லன் என்று கூறப்படுகிறது. ஆனால் முதலில் இந்த படத்தின் வில்லன் எஸ்ஜே சூர்யா என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது விஜய் சேதுபதிதான் முக்கிய வில்லன் என்கின்றனர். ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் நடிக்க ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை, மறுத்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. அதே போல் கூலி படத்திலும் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் பரவிய நிலையில் அந்த படத்தில் ஷாருக்கான் நடிக்கவில்லை.
ஆனால் நடிகர் ஷாருக்கான் ஜெயிலர் 2 படத்தில் நடித்திருப்பது உண்மைதான் என்று இப்போது தெரிய வந்துள்ளது. இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஒரு நேர்காணலில் சமீபத்தில் பேசியிருக்கிறார். அப்போது இந்த தகவலை உறுதிபடுத்தி இருக்கிறார். ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார் என்று அவர் கூறியிருக்கிறார்.
ஆனால் ஜெயிலர் 2 படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட நிலையில் எப்படி இத்தனை நாட்களாக இந்த தகவல் லீக் ஆகாமல் இருந்தது? இந்த ரகசியத்தை படக்குழு எப்படி மறைத்தது என்று ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே அவர் கெஸ்ட் ரோலில் நடித்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.





