- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தில் ஸ்ருதிஹாசன் நடிச்சிருக்காரே…? திடீர் பீதியை கிளப்பும் ஒரு தரப்பு ரசிகர்கள் - அந்த...

கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் நடிச்சிருக்காரே…? திடீர் பீதியை கிளப்பும் ஒரு தரப்பு ரசிகர்கள் – அந்த சென்டிமென்ட்டை இதுல லோகேஷ் நொறுக்கித் தள்ளுவாரா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஏஆர் முருகதாஸ் இயக்கிய இந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சிறந்த நடிப்பையும் ஸ்ருதிஹாசன் தந்திருந்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களில் அவர் நடித்தார்.

குறிப்பாக தனுஷூடன் 3 விஜயுடன் புலி அஜீத்குமாருடன் வேதாளம் விஷாலுடன் பூஜை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் தொடர்ந்து ஸ்ருதிஹாசனுக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை. பிறகு தெலுங்கு பக்கம் போனார். தாராளமான கவர்ச்சி காட்டிய அவருக்கு தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

- Advertisement -

எனினும் தமிழில் நடித்தால்தான் பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆக முடியும் என்பதால் தமிழ் படங்களில் நடிக்கவே ஸ்ருதிஹாசன் மிகவும் விரும்புகிறார். இதற்கிடையே தனது தந்தை கமல் நடித்த விக்ரம் என்கிற வெற்றிப் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் நெருக்கமான நட்பு ஸ்ருதிஹாசனுக்கு ஏற்பட்டது.

இதையடுத்து ஸ்ருதிஹாசன் தயாரித்த இனிமேல் என்ற இசை ஆல்பம் வீடியோவில் அவரது காதலர் கேரக்டரில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார். இருவரும் நெருக்கமாக அந்த வீடியோவில் நடித்திருந்த நிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனார். லோகிண்ணா, என்ன அண்ணா இதெல்லாம் என்றும் அவரது ரசிகர்கள் புலம்பியிருந்தனர்.

- Advertisement -

இந்த சூழலில் இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் சத்யராஜின் மகளாக நடித்திருக்கிறார். ஏற்கனவே தமிழில் பிளாப் நாயகி என்ற சென்டிமென்ட் ஸ்ருதிஹாசனுக்கு உள்ளதாக ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஸ்ருதிஹாசன் நடித்தால் அந்த படம் பெரிய அளவில் ஓடாது என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு சென்டிமென்ட் இருந்து வருகிறது.

இப்படி ஒரு சென்டிமென்ட் நடிகை பிரியா பவானி சங்கருக்கும் இருந்து வந்தது. அவர் ராசியில்லாத நடிகை என்று பலரும் கூறிய நிலையில் அவர் நாயகியாக நடித்த டிமாண்டி காலனி 2 படம் மாஸ் ஹிட் ஆனது. அதே போல் கூலி படமும் மாஸ் ஹிட் கொடுத்து, ஸ்ருதிஹாசன் ராசியான நடிகை என்ற பெயரை கொடுக்குமா, ஸ்ருதிஹாசன் மீதான சென்டிமென்டை கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் அடித்து நொறுக்கி விடுவாரா என்று தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்