- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் என்னை அப்படி நடிக்க வைத்து விட்டார் - நடிகை ஸ்ருதிஹாசன்...

கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் என்னை அப்படி நடிக்க வைத்து விட்டார் – நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ருதிஹாசன் பல படங்களில் நாயகியாக நடித்தும் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. ஏழாம் அறிவு படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமான ஸ்ருதிஹாசன் 3 பூஜை புலி வேதாளம் என பல படங்களில் நடித்தும் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.

மலையாளம் தெலுங்கு கன்னடம் மொழிகளில் இருந்து தமிழுக்கு வரும் கதாநாயகிகளுக்கு தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பும் முன்னணி படங்களில் நடிக்கும் வாய்ப்பு தாராளமாக கிடைக்கிறது. ஆனால் தமிழில் நடிகர் கமல்ஹாசனாக மகளாக இருந்தும் அழகு நடிப்பாற்றல் இருந்தும் ஸ்ருதிஹாசனால் பெரிய அளவில் பிரகாசிக்க முடியவில்லை.

- Advertisement -

இதற்கிடையே தெலுங்கு பக்கம் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு அங்கு பலமான வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தாராளமான கவர்ச்சிக்கு தெலுங்கில் எப்போதுமே நல்ல வாய்ப்பு உள்ளதால் அழகான நடிகையான ஸ்ருதிஹாசனுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு தானாகவே அமைந்தது.

இதற்கிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது, கூலி படத்தில் வலிமையான ஒரு கேரக்டரில் நான் சத்யராஜின் மகளாக ப்ரீத்தி என்ற பெயரில் நடித்திருக்கிறேன்.

- Advertisement -

இந்த படம் முழுவதும் நான் முக்கிய ரோலில் வருகிறேன். வலிமையும் பெண்மையும் நிறைந்த இந்த கேரக்டரை படம் பார்க்கும் ரசிகர்கள் விரும்பி ரசித்து ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். இந்த படத்தில் மேக்கப் போடாமல் என்னை லோகேஷ் கனகராஜ் நடிக்க வைத்து விட்டார். இப்படி மேக்கப் இல்லாமல் நடிப்பது இதுதான் முதல்முறை.

ரஜினி சாருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். ஒவ்வொரு விஷயத்தையும் அவர் உன்னிப்பாக கவனித்து மிகவும் துல்லியமாக செயல்படுகிறார். இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் நாகர்ஜூனா நடிப்பை பார்த்து நான் அவரது தீவிர ரசிகையாக மாறிவிட்டேன். என்று நடிகை ஸ்ருதிஹாசன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்