தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா படத்தில் 5 வயதில் தனது சினிமா பயணத்தை துவங்கிய கமல்ஹாசன் இப்போது 70வது வயதில் தனது 236 வது படமாக தக்லைஃப் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து 237வது படமாக அன்பறிவ் மாஸ்டர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இன்னும் ஹீரோவாக நடித்து வரும் கமல்ஹாசன் சினிமா அரசியல் என இரண்டு களங்களிலும் பயணம் மேற்கொண்டு வருகிறார். மகா கலைஞனாக சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்தி காட்டிய இந்த உலக நாயகன், அரசியலில் நினைத்த அங்கீகாரத்தை அடையாளத்தை பெற முடியாமல் கடைசியில் திமுக வசம் அடைக்கலமாகி இருப்பதே கசப்பான விஷயம்தான்.
நடிகர் கமல்ஹாசன் சரிகா தம்பதிக்கு பிறந்த மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன். இருவருமே இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகின்றனர். இருவருமே திருமண வயது கடந்து பல ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், முரட்டு சிங்கிளாகவே இருப்பது என்ற முடிவில்தான் ஸ்ருதிஹாசனும் அக்சராஹாசனும் இருந்து வருகின்றனர்.
தமிழில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படம் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ருதிஹாசன் 3 பூஜை வேதாளம் புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழில் பெரிய வரவேற்பு இல்லாத நிலையில் தெலுங்கில் நிறைய படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். இப்போது ரஜினி நடித்த கூலி படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துகள். கூலி படத்தில் ரஜினியுடன் நடித்தது ஒரு மகிழ்ச்சியான புதிய அனுபவமாக இருந்தது. அப்பாவுடன் நான் அவரது படங்களில் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன். அவர் ஓகே சொன்னால் எப்போது என்றாலும் அவருடன் சேர்ந்து நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன் என்று ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனுடன் அவரது மகள் ஸ்ருதிஹாசன், கடந்த 1997ம் ஆண்டில் வெளியான சாக்சி 420 என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதே போல் கடந்த 2000ம் ஆண்டில் வெளியான ஹேராம் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போதெல்லாம் அவர் கமல் மகள்தான் என்பது பெரும்பாலான ரசிகர்களுக்கே தெரியாது. இப்போது கமலுடன் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்தால், அப்பா மகள் நடித்த படமாக அது ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.





