- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தில் ஸ்ருதிஹாசன் கேரக்டர் குறித்து கசிந்த தகவல், ஆனா நாங்க நெனைச்சது வேற...

கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் கேரக்டர் குறித்து கசிந்த தகவல், ஆனா நாங்க நெனைச்சது வேற மாதிரி ஆச்சே – புலம்பும் ரஜினி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். பாடகியாக மட்டுமின்றி நடிகையாகவும் இருந்து வருகிறார். தமிழில் நடிகர் சூர்யாவுடன் 7ம் அறிவு படத்தில் ஸ்ருதிஹாசன் அறிமுகமானார். தொடர்ந்து 3 புலி பூஜை வேதாளம் சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தமிழில் ஸ்ருதிஹாசனுக்கு பெரிய வாய்ப்புகள் இல்லாததால் அவர் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் உபேந்திரா அமீர்கான் நாகர்ஜூனா சத்யராஜ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திர நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து விக்ரம் 2 படமும் உருவாக உள்ளது. கமல்ஹாசனுடன் நெருங்கிய நட்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். அதனால் கமல் மகள் ஸ்ருதிஹாசனும், லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார்.

கடந்தாண்டில் ஸ்ருதிஹாசன் உருவாக்கிய இனிமேல் என்ற இசை ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜூம், ஸ்ருதிஹாசனும் இணைந்து நடித்திருந்தனர். காதலர்களாக அந்த இசை ஆல்பத்தில் அவர்கள் இருவரும் நெருக்கமாக நடித்தது தமிழ் சினிமா ர்சிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இப்போது ரஜினி நடித்து வரும் கூலி படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் ரஜினியின் மகளாக தான் ஸ்ருதிஹாசன் நடிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இப்போது அதுபற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.

கூலி படத்தில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். சத்யராஜின் மகளாக தான் ஸ்ருதிஹாசன் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் அவருக்கு மிகவும் பவர்புல் கேரக்டர் தரப்பட்டுள்ளதால் கூலி படம் வெளியான பிறகு ஸ்ருதிஹாசனுக்கு பட வாய்ப்புகள் குவியும். அந்தளவுக்கு அவரது இமேஜ் தமிழ் சினிமாவில் உயரும் அளவுக்கு அவரது கேரக்டர் பேசப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்