- Advertisement -
Homeபொழுதுபோக்குகதை சொல்ல காத்திருக்கும் பார்க்கிங் பட இயக்குனர், அவரது அடுத்த படத்தில் நடிக்க ஓகே சொன்ன...

கதை சொல்ல காத்திருக்கும் பார்க்கிங் பட இயக்குனர், அவரது அடுத்த படத்தில் நடிக்க ஓகே சொன்ன மாஸ் நடிகர் – போட்றா வெடிய… உற்சாகத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் பார்க்கிங். ஹரீஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர், இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்த இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. காம்பவுண்டுக்குள் காரை நிறுத்துவது யார் என்ற பிரச்னையை மையப்படுத்திய இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர் இருவரிடையே ஏற்படும் ஈகோ பிரச்னையால், காரை நிறுத்துவதில் ஆரம்பிக்கும் மோதல், இறுதிக்கட்டத்தில் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவுக்கு மாறிவிடுவதுதான் இந்த படத்தில் ஹைலைட்டாக இருந்தது.

- Advertisement -

வழக்கமான மசாலா படங்களை, கமர்ஷியல் என்ற பெயரை ரசிகர்களை வெறுப்படைய செய்யும் படங்களுக்கு மத்தியில் பார்க்கிங் போன்ற யதார்த்தமான படங்கள் அத்தி பூத்தது போல எப்போதாவதுதான் தமிழ் சினிமாவில் வெளியாகின்றன என்பதால், பார்க்கிங் படத்துக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பை தந்தனர்.

நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு லப்பர் பந்து படத்துக்கு முன்பாக பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்த படம்தான் பார்க்கிங். அதே போல் குணச்சித்திர நடிப்பில் தமிழ் சினிமாவில் அசத்திக்கொண்டிருக்கும் எம் எஸ் பாஸ்கருக்கும் பார்க்கிங் படம் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுத் தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், நடிகர் சிலம்பரசனை சந்தித்து கதை சொல்லி இருக்கிறார். படத்தின் கதைக் கருவை கேட்டுவிட்டு மிகவும் பிடித்துவிட்டதாக கூறிய சிம்பு, இரண்டரை மணி நேர கதையாக தயார் செய்துவிட்டு சொல்லுங்கள். கதையை கேட்கிறேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து அந்த படத்துக்கான இரண்டரை மணி நேர ஸ்கிரிப்ட் தயார் செய்துள்ள இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிம்புவின் அப்பாயின்ட்மெண்டுக்காக காத்திருக்கிறார். தக்லைப் படத்துக்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க உள்ள சிம்பு, அதைத் தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க உள்ளது உறுதியாகி விட்டது.

- Advertisement -

சற்று முன்