- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த இயக்குனரின் படத்தில் நடிக்காமல் விட மாட்டேன், நடிகர் சிலம்பரசன் எடுத்த புது சபதம் -...

அந்த இயக்குனரின் படத்தில் நடிக்காமல் விட மாட்டேன், நடிகர் சிலம்பரசன் எடுத்த புது சபதம் – வாய்ப்பில்ல ராஜா என கைவிரிக்கும் தயாரிப்பாளர்கள், தில்லுவை நம்பும் சிம்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவை காட்டிலும், மலையாள படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க காரணம், அவர்கள் யதார்த்தமான கதைகளை படமாக்குகின்றனர். ஹீரோயிசம் என்ற பெயரில், ரசிகர்களுக்கு வித்தை காட்டும் வேலையை அவர்கள் செய்வதில்லை. அவர்கள் நம்புவது கதையைத் தானே தவிர, ஹீரோக்களை அல்ல. கதைதான் ஹீரோவை தேர்வு செய்யுமே தவிர, ஹீரோவுக்காக அவர்கள் கதை உருவாக்குவதில்லை.

ஆனால் தமிழ் சினிமாவில் இது நேருக்குமாறாக இருக்கிறது. நடிகர்களை பெரிய கொம்பன்களாக காட்டும் ஹீரோயிச கதைகளை, கமர்ஷியல் என்ற பெயரில் குப்பையாக தமிழ் இயக்குனர்கள் பலரும் தந்துக்கொண்டு இருக்கின்றனர். ஹீரோ, வில்லன்களை பழிவாங்குவதுதான் தமிழ் சினிமா கதையாக அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது.

- Advertisement -

மலையாளத்தில், 2018 என்ற படம் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் வெளியானது. 2018ம் ஆண்டில் கேரளாவில் பலத்த மழைவௌ்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சொன்ன இந்த படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கி இருந்தார். இந்த படம், மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கிளைமாக்ஸில் மழை வெள்ள பாதிப்பு காட்சிகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தி, ரசிகர்களை பதற வைத்தனர்.

இந்த படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்பை முதலில் லைகா புரடக்சன்ஸ் புக்கிங் செய்து, நீண்ட மாதங்களாக காத்திருப்பில் வைத்தது. பெரும்தொகையை அட்வான்ஸாக கொடுத்த லைகா புரடக்சன்ஸ், அதற்கு பிறகான அடுத்தக்கட்ட பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. இதையறிந்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்பை தனது நிறுவனத்துக்கு படம் இயக்க புக்கிங் செய்தார்.

- Advertisement -

மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் சொன்ன கதையை கேட்டு அசந்து போன ஐசரி கணேஷ், அதில் சிம்புவை நாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டார். சிம்புவும் கதையை கேட்டு மிகவும் பிடித்துப்போய் உடனே ஓகே சொல்லிவிட்டார். ஆனால் படத்தின் பட்ஜெட் ரூ. 150 கோடி என்று இயக்குனர் சொன்னதால், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பின்வாங்கி விட்டார். ஏனென்றால் சிம்புவை வைத்து அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க அவர் முன்வரவில்லை.

ஆனால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழக்க விரும்பாத சிம்பு, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திடம் தனது நண்பரை அனுப்பி இதுபற்றி பேச வைத்தார். அவர்களும் சிம்புவை ஹீரோவாக வைத்து, அவ்வளவு பெரிய பட்ஜெட் படம் எடுக்க தயாராக இல்லை. இதையடுத்து இப்போது தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூவை சிம்பு தரப்பு அணுகியுள்ளனர். இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் மறுத்த நிலையில், தில் ராஜூ ஓகே சொல்வாரா என்ற எதிர்பார்ப்பில் சிம்பு காத்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்