- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாரா? சூர்யா நடித்த கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு...

அட நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாரா? சூர்யா நடித்த கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு – என்ன காரணம் தெரியுமா?

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான படம் கருப்பு. இந்த படத்தை நடிகர் ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் யோகிபாபு நட்டி ஷிவதா சுவாசிகா மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜியும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

நடிகர் ஆர்ஜே பாலாஜி ஏற்கனவே நல்ல படங்களில் நடித்தவர். மேலும் வீட்ல விசேஷம் மூக்குத்தி அம்மன் சிங்கப்பூர் சலூன் போன்ற அவரது படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை கவனத்தை பெற்ற படங்களாக உள்ளன. கருப்பு படத்தில் சூர்யா வக்கீலாகவும் அய்யனார் சாமியாகவும் 2 வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு பெரிய வெற்றிப் படங்கள் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக இல்லை. குறிப்பாக 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை அவரது நடிப்பில் தியேட்டரில் வெளியான 10 படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ஜெய்பீம் சூரரைப் போற்று படங்கள் மட்டுமே வணிக ரீதியான வெற்றியை பெற்றன.

கடைசியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா பூஜா ஹெக்டே நடித்த ரெட்ரோ படமும் 230 கோடி ரூபாய்க்கு மேல் வணிக ரீதியான வெற்றிப் படமாக இருந்தாலும் சூர்யாவுக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தரும் படமாக ரெட்ரோ இருக்கவில்லை. இப்போது கருப்பு படம்தான் சூர்யாவுக்கு மாஸ் ஹிட் படமாக இருக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- Advertisement -

இந்நிலையில் கருப்பு படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த படத்தில் ஒரு காட்சியில் கேமியோ ரோலில் நடிக்க நடிகர் சிம்புவிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கேரக்டர் வலுவானதாக இல்லை என்பதால் அந்த ரோலில் நடிக்க சிம்பு மறுத்து விட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான பத்துதலை தக்லைஃப் ஆகிய 2 படங்களுமே எதிர்பார்த்த வரவேற்பை வெற்றியை பெறாத நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையே சூர்யா படத்தில் சிம்பு கேமியோ ரோலில் நடித்திருந்தால் அது அவரது ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கும். நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாரே என்று சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்