தமிழ் சினிமாவில் பல ஆயிரக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் சித்ரா. குறிப்பாக பூவே பூச்சூடவா படத்தில் அவர் அவர் பாடிய சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா என்ற பாடலுக்கு பிறகு அவர் சின்னக்குயில் சித்ரா என்றே ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
முன்னணி பாடகர்களான எஸ்பி பாலசுப்ரமணியம் கேஜே ஜேசுதாஸ் மனோ இளையராஜா ஜெயச்சந்திரன் உன்னிகிருஷ்ணன் என பாடகி சித்ரா பல ஆயிரக்கணகான சூப்பர் ஹிட் பாடல்களை தந்திருக்கிறார். தமிழில் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு என பிற மொழிகளிலும் ஏராளமான பாடல்களை சித்ரா பாடியிருக்கிறார்.
சிந்து பைரவி படம்தான் சித்ரா பாடகியாக அறிமுகமான முதல் படம். பாடறியேன் படிப்பறியேன்… நான் ஒரு சிந்து காவடி சிந்து ராகம் புரியவில்லே… போன்ற பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அதன்பிறகு சித்ரா பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் இதயம் தொட்டன.
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்… நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம் போன்ற பல பாடல்கள் சித்ராவின் இசை ஆளுமையை வெளிப்படுத்தும் சிறந்த பாடல்களாகும். இன்னும் சினிமாவில் சித்ரா பிஸியாக பாடிக்கொண்டு இருக்கிறார். டிவி சேனல்களில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளிலும் சித்ரா நடுவராக பங்கேற்று வருகிறார்.
சின்னக்குயில் சித்ரா, விஜயசங்கர் என்பதை திருமணம் செய்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பின் இந்த தம்பதிக்கு கடந்த 2002ம் ஆண்டில் நந்தனா என்ற மகள் பிறந்தார். ஆனால் 2011ம் ஆண்டில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த போது 9 வயதான நந்தனா, அங்கிருந்த நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்தார். தன் ஒரே மகளை பாடகி சித்ரா இழந்த நிலையில் இப்போதும் வேதனையில் இருந்து வருகிறார்.
தனது மகள் நந்தனா நினைவு நாளான நேற்று, பாடகி சித்ரா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, உன்னை இனி என்னால் தொட முடியாது. உன் பேச்சைக் கேட்க முடியாது. உன்னை பார்க்க முடியாது. ஆனால் நீ என் இதயத்தில் இருப்பதால் உன்னை எப்போதும் உணர முடிகிறது. என் அன்பே நான் மீண்டும் ஒரு நாள் சந்திப்போம். உன்னை இழந்த வழி அளவிட முடியாதது. வானத்தில் பிரகாசிக்கிற மிகப்பெரிய நட்சத்திரம் நீ தான் என்பதை நான் அறிவேன். படைப்பாளர்களின் உலகில் நீ நன்றாக வாழ்கிறாய் என்று நான் நம்புகிறேன் என்று பாடகி சித்ரா அந்த பதிவில் உருக்கமாக கூறியிருக்கிறார்.





