தமிழ் சினிமாவில் இளம் நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ரவிமோகன். ஆரம்பத்தில் ஜெயம் ரவி என்ற பெயரில் இருந்த அவர் சமீபத்தில் தனது பெயரை ரவிமோகன் என மாற்றிக்கொண்டார். மேலும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியுள்ளார்.
ஜெயம் சந்தோஷ் சுப்ரமணியம் தனி ஒருவன் போகன் பேராண்மை வனமகன் உனக்கும் எனக்கும் என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ரவி மோகன், கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து படுதோல்வி படங்களை தந்து வருகிறார். அகிலன் இறைவன் சைரன் 108 பிரதர் காதலிக்க நேரமில்லை என அவர் நடித்த படங்கள் எதுவுமே சரியாக போகவில்லை.
இந்நிலையில் தனது காதல் மனைவி ஆர்த்தி மற்றும் தனது பிள்ளைகளை சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார். அவர்களது விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவர் பின்னணி பாடகி கெனிஷா என்பவருடன் நெருக்கமான நட்பில் இருந்தார்.
திருமண விழாக்கள், கோவில்கள், திரைப்பட விழாக்களில் அவர்கள் இருவரும் ஜோடியாக வந்து கலந்துக்கொண்டனர். கணவன் மனைவி போலவே காணப்பட்டனர். இது இணையத்தில் வைரலான நிலையில் இதுகுறித்து ரவிமோகனின் மனைவி ஆர்த்தி ரவி கடுமையாக விமர்சித்தார். இதற்கு ரவிமோகன் தரப்பிலும் இருந்தும் பதில் சொல்லப்பட்டது.
ஒரு கட்டத்தில் இது அறிக்கை போராக மாறிய நிலையில் பெரிய சர்ச்சையானது. இதற்கிடையே சமீபத்தில் நடிகர் ரவிமோகனை விட்டு கெனிஷா பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து பிரஸ்மீட்டில் பேசிய ரவிமோகன், என்னை அழிக்க சதி நடக்கிறது என்று கதறி அழுதபடி பேசியது இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் பாடகி கெனிஷா மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். மலையாள இயக்குனர் ஜிதின் ஐசக் தாமஸ் இயக்கத்தில் மட் பிஷ் என்ற படத்தில் சன்னி வேய்ன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாடகி கெனிஷா நடிக்கிறார். இது அவர் அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.





