தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வருபவர் சுசித்ரா. இவர் சில நடிகர் நடிகைகள் குறித்து சில சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவுகளை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தியவர். குறிப்பாக கவிஞர் வைரமுத்து தன்னை பாராட்ட தனியாக அழைத்தார். பாட்டியுடன் நான் அவர் வீட்டுக்கு சென்றால் ஷாம்பூ பாட்டில்களை தந்தார் என்று கூறியிருந்தார்.
சமீபத்தில் நடிகர் ரவி மோகன் தனது தோழி கெனிஷாவுடன் திருமண விழாவில் ஒன்றில் பங்கேற்றார். இது இணையத்தில் வைரலானது. அவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்துள்ள நிலையில் தோழியுடன் நெருக்கம் காட்டியதை பலரும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் என் வாழ்வின் ஒளியே கெனிஷாதான் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, நடிகர் ரவி மோகனும் கெனிஷாவும் அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிவிட்டார்கள்? சினிமா உலகத்தில் யாரும் செய்யாத தவறா செய்துவிட்டார்கள்?
எல்லோரும் கமுக்கமாக செய்கிறார்கள். ரவியோ அதை வெளிப்படையாக செய்கிறார். அதோடு அந்த பெண்ணுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார். அதனால் அனைத்து பெண்களுமே கெனிஷாவை பார்த்து பெருமைப்பட வேண்டும். எதற்காக அவரை தாழ்த்தி பேசுகிறீர்கள்?
இவ்வளவு ஆண்டுகளாக ஒர்க் அவுட் ஆகாத ஒரு திருமணத்திற்காக ஒருத்தி அழுது கொண்டிருக்கிறார். அவருக்கு கெனிஷாவை பற்றி கூறுவதற்கு என்ன தகுதி உள்ளது? அவர் என்ன பெரிதாக தவறு செய்துவிட்டார்? யாரும் போடாத மியூசிக் வீடியோவை அவர் போட்டு விட்டாரா?. அவரது வீடியோ உங்கள் கண்ணை உறுத்துகிறதா? நடிகை ஆண்ட்ரியா மேடையில் போடும் டிரஸ்சை தான் அவரும் போடுகிறார்.
அப்படி இருக்கும் போது எதற்காக அவருடைய உடைகளை விமர்சனம் செய்கிறீர்கள்? இது உங்களுக்கு அசிங்கமாக இல்லையா என்று பல கேள்விகளை கேட்டுள்ள பாடகி சுசித்ரா, ரவி மோகன் தன்னுடைய பெயரில் இருந்த ஜெயம் என்பதை எடுக்காமல் இருந்திருக்கலாம். அந்தப் பெயர் தான் அவருக்கு தனித்துவமாக இருந்தது என்றும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பாடகி சுசித்ரா. இது இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.





