- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா எனக்காக உருவாக்கப்பட்ட கதை... திடீரென குறுக்கே புகுந்த சூப்பர் ஸ்டார்... சூர்யா பட இசை...

கங்குவா எனக்காக உருவாக்கப்பட்ட கதை… திடீரென குறுக்கே புகுந்த சூப்பர் ஸ்டார்… சூர்யா பட இசை வெளியீட்டு விழாவில் குண்டை தூக்கிப்போட்ட ரஜினி…

- Advertisement -

சிறுத்தை சிவா சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம், அடுத்த மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா திரைப்படமாக பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சூர்யாவின் தம்பி கார்த்தி, இயக்குனர்கள் கார்த்திக் சுப்பராஜ், ஆர் ஜே பாலாஜி, போஸ் வெங்கட் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஆர் ஜே பாலாஜி, சில முக்கிய இயக்குனர்களின் கதையை புறக்கணித்துவிட்டு உங்களின் கதையை மட்டும் எப்படி சூர்யா ஏன் தேர்வு செய்தார் என்று சிலர் கேட்டனர்.

- Advertisement -

 

நன்றி சூர்யா சார் நீங்கள் என் கதை மீது நம்பிக்கை வைத்ததற்கு. பலரும் என்னிடம் என்ன குக் செய்து வருகிறீர்கள் என்று கேட்கிறார்கள். நிச்சயமாக தரமாகவும், பயங்கரமாகவும் குக் செய்து அடுத்த வருடம் நாங்கள் தருவோம் என்று கூறினார். இதேபோல், மேடையில் பேசிய கார்த்திக் சுப்புராஜ்,

- Advertisement -

 

நாங்கள் படப்பிடிப்பில் இருக்கும் போது சூர்யா சார் அவ்வபோது கங்குவா திரைப்படம் குறித்து பேசுவார். நானும் அவரிடம் அதைப் பற்றி கேட்பேன். ஒருமுறை அந்த படத்தில் இருந்து ஐந்து நிமிட வீடியோவை காட்டினார். அது அவ்வளவு பயங்கரமாக இருந்தது. எல்லோரும் பெருமை படக்கூடிய வகையில் கங்குவா இருக்கும் என்று தெரிவித்தார்.

 

நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காணொளி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கூலி திரைப்படத்தின் சூட்டிங் பணிகளால் தன்னால் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார். அண்ணாத்த திரைப்படத்தின் சூட்டிங் போது, சிவாவிடம் எனக்கு ஒரு வரலாறு சார்ந்த படத்தை எடுங்கள் என்று கூறினேன்.

 

அவர் செய்கிறேன் சார் என்று கூறினார். அதுதான் கங்குவா. கங்குவா எனக்காக உருவாக்கப்பட்ட கதை. அதை சூர்யாவிற்கு தகுந்தார் போல் மாற்றிவிட்டார் என்று நினைக்கிறேன். நிச்சயமாக சிவா என்னுடன் சேர்ந்து இன்னொரு படம் பண்ணுவார் என்று தெரிவித்தார். ரஜினிகாந்தின் இந்த பேச்சு அரங்கத்தை அதிர வைத்தது.

 

- Advertisement -

சற்று முன்