- Advertisement -
Homeபொழுதுபோக்குஅண்ணனைத் தொடர்ந்து தம்பியுடன் கைகோர்க்க போகிறாரா சிறுத்தை சிவா... இது என்னப்பா இன்ப அதிர்ச்சியான தகவலா...

அண்ணனைத் தொடர்ந்து தம்பியுடன் கைகோர்க்க போகிறாரா சிறுத்தை சிவா… இது என்னப்பா இன்ப அதிர்ச்சியான தகவலா இருக்கே…

- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான கடைசி இரண்டு திரைப்படங்களும் படுதோல்வியை சந்தித்துள்ளன. இதில் முதலாவதாக அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த திரைப்படத்தை எடுத்தார். நயன்தாரா கீர்த்தி சுரேஷ் குஷ்பூ மீனா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இடம்பெற்று இருந்த இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக எந்த ஒரு வரவேற்பையும் பெறவில்லை.

வழக்கமான அண்ணன் தங்கை கதையையே எந்த ஒரு சுவாரசியமும் இல்லாமல் இந்த திரைப்படம் கொடுத்திருப்பதாக பலரும் கூறினார்கள். இதனால் அண்ணாத்த ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய் ஆக்கியது. இதனைத் தொடர்ந்து, சூர்யாவுடன் கைகோர்த்து கங்குவா படத்தை அவர் கொடுத்தார்.

இந்த ஒரு படத்திற்காக மட்டும் கிட்டத்தட்ட ஓராண்டு செலவழித்தார் சூர்யா. மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இதனை தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தை சூர்யா மிகவும் நம்பி இருந்தார்.

ஆனால் இதன் திரைக்கதையில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டதால், கங்குவா திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெறும் 80 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஈட்டியது. குறிப்பாக படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.

இதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா அடுத்ததாக அஜித்துடன் இணைவதாகவே தகவல் வெளியாகி இருந்தது. ஏற்கனவே இது குறித்த கதையை அவர் அஜித்திடம் கூறி விட்டதாகவும், அதற்கு நடிகரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவே பேசப்பட்டது. ஆனால் திடீரென அந்த ப்ராஜெக்டில் இருந்து அஜித்குமார் விலகியதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படியான சூழலில் தான் சிறுத்தை சிவா அடுத்ததாக கார்த்தியுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் சிறுத்தை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது தோல்வியில் துவண்டு கிடக்கும் அவருக்கு கார்த்தி வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஒரு எமோஷனல் ஸ்டோரியாக எடுக்கப்பட இருக்கிறதாம். விரைவில் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று பேசிக்கொள்கிறார்கள்.

சற்று முன்