- Advertisement -
Homeபொழுதுபோக்கு2031ல் உறுதியாக அரசியல் களத்துக்கு வந்துவிடலாம் - முதல்வர் கனவில் மிதக்கும் நட்சத்திர ஹீரோக்களுக்கு நம்பிக்கை...

2031ல் உறுதியாக அரசியல் களத்துக்கு வந்துவிடலாம் – முதல்வர் கனவில் மிதக்கும் நட்சத்திர ஹீரோக்களுக்கு நம்பிக்கை தந்த இடைத்தேர்தல் முடிவுகள்!

- Advertisement -

எப்போதுமே ஆளுங்கட்சி இருக்கும் போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும் 90 சதவீதம் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்பது கடந்தகால வரலாறு. அது இன்றும் உண்மையாகி விட்டது. அதற்கு முக்கியமான ஒரு காரணம், ஆளுங்கட்சி இல்லாமல் வேறு ஒரு கட்சி எம்எல்ஏ வந்தால் தங்கள் தொகுதிக்கு எந்த வளர்ச்சி பணியும் நடக்காது என்ற மக்களின் எண்ணமே முக்கிய காரணம்.

அதனால் அதை முக்கியமான காரணமாக சொல்லி சொல்லியே மக்களின் மனதை மாற்றி ஆளுங்கட்சி இடைத்தேர்தலில் வென்று விடும். மேலும் அதிகார பலம் பண பலம் இருப்பதால் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தும் பட்டுப்புடவை கொடுத்தும் பரிசுப் பொருட்கள் கொடுத்தும் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி எளிதாக ஜெயித்து விடும்.

அதே பார்மூலாவில் தான் இந்த முறை தவெகவும் ஜெயித்திருக்கிறது. டிபன் கேரியரில் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை பல இடங்களில் வினியோகம் நடந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பட்டுப்புடவை காமாட்சி விளக்கு போன்றவையும் தரப்பட்டு வாக்காளர்களை தன்வசப்படுத்தி உள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நம்ம ஓட்டு போட்டால் தவெக ஆட்சியா கவிழப் போகுது? கிடைக்கும் வரை லாபம்தான் என்று நினைத்த தாராபுரம் மதுராந்தகம் மக்களும் விசிலை ஊதி விட்டனர் போலிருக்கிறது. ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் தவெக கட்சி வேட்பாளர்களை முற்றிலும் நிராகரித்த இவர்கள்தான் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

தமிழக முதல்வராக விஜய் வந்த பிறகு இந்த 5 மாதங்களில் அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்தன. மக்கள் எதிர்பார்த்த ஆட்சியை அவர் தரவில்லை என்பதே உண்மை. இப்படி மக்கள் எதிர்ப்பை சந்தித்த ஒரு கட்சிக்கு மீண்டும் இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு தந்திருப்பது பெரிய சந்தேகத்தை குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் அரசியலுக்கு வரத்துடிக்கும் சில நட்சத்திர நடிகர்களுக்கு நம்பிக்கையை தந்திருக்கிறது.

நடிகர் தனுஷ் மிக விரைவில் அரசியல் வரவை அறிவிக்க உள்ளார். அதே போல் நடிகர் சிவகார்த்திகேயனும் அரசியல் களத்தில் குதிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மேலும் நடிகர்கள் சூர்யா சிம்பு ரவிமோகன் விஜய் சேதுபதி போன்றவர்களுக்கும் அரசியல் ஆசை இருப்பதாகவும் தங்களது ரசிகர் மன்ற இயக்கங்களை பலப்படுத்த துவங்கியதாகவம் கூறப்படுகிறது. அதனால் இந்த இடைத்தேர்தல் வெற்றிக்கு விஜய்க்கு சாதகமாக மாறியதால் அரசியலுக்கு கண்டிப்பாக வரும் முடிவில் அவர்கள் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

சற்று முன்