- Advertisement -
Homeபொழுதுபோக்குமதராஸி படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெறுமா? பயங்கர குழப்பத்தில் அப்செட் ஆன நடிகர்...

மதராஸி படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெறுமா? பயங்கர குழப்பத்தில் அப்செட் ஆன நடிகர் சிவகார்த்திகேயன் – அந்த 2 ஜாம்பவான்களையே கதற விட்ட டைரக்டர் ஆச்சே…

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா படம் மூலம் 12 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பில் இதுவரை 22 படங்களே வெளியான நிலையில், 23வது படமாக மதராஸி படத்திலும் 25வது படமாக பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கும் படம்தான் எஸ்கே 24 என்றும் கூறப்படுகிறது.

நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே சரியாக கணித்து போதிய திட்டமிட்டு காய்களை சரியாக நகர்த்தி தனது திரை பயணத்தில் வெற்றிகளை தொடர்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் அமரன் படம் அமோக வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை டபுள் மடங்காக ரூ. 70 கோடி வரை உயர்த்தி விட்டார். மதராஸி பராசக்தி படங்களும் பெரிய வெற்றி பெற்றால் இவரும் ரூ. 100 கோடி சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் இணைந்து விடுவார்.

- Advertisement -

பராசக்தி படப்பிடிப்புக்கு இடைவெளி விட்டுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களாக இலங்கையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் நடந்த கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் 15 நாட்களாக இரவு நேரங்களில் படமாக்கப்பட்டு முடித்த நிலையில் படக்குழு சென்னை திரும்பி விட்டது.

இந்நிலையில் மதராஸி படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெறுமா என்பதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பலத்த சந்தேகமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கஜினி ஏழாம் அறிவு ரமணா கத்தி துப்பாக்கி சர்கார் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்தவர்தான் ஏஆர் முருகதாஸ்.

- Advertisement -

ஆனால் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தையும் இந்தியில் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படத்தையும் இயக்கியவர்தான் ஏஆர் முருகதாஸ். இந்த 2 படங்களுமே மிக மோசமான தோல்வியை தழுவிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களின் கதை திரைக்கதை குறித்து கடும் விமர்சனங்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது நடிப்பில் வெளியாகும் மதராஸி படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெறுமா, அல்லது தர்பார் சிக்கந்தர் படங்களை போல சொதப்பி விடுமா? தொடர் வெற்றிகளால்தான் அடுத்தடுத்த உயரங்களை அடைய முடியும் என்ற நிலையில், ஏஆர் முருகதாஸின் மதராஸி படம் தனக்கு கை கொடுக்குமா என்ற குழப்பத்தில் சிவகார்த்திகேயன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்