- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்தடுத்து ரவுண்ட் கட்டி இருக்கும் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள்... அதிலும் இந்த இயக்குனருடன் இணைவது தான் மாஸு...

அடுத்தடுத்து ரவுண்ட் கட்டி இருக்கும் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள்… அதிலும் இந்த இயக்குனருடன் இணைவது தான் மாஸு…

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அயலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 2018 ஆம் ஆண்டு இதன் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பொருளாதார சிக்கல்கள் காரணமாக இது முடங்கி இருந்தது. பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் திரையரங்குகளுக்கு வந்தது. ஏலியன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

இருப்பினும் குடும்ப ஆடியன்ஸ்கள் அயலான் திரைப்படத்திற்கு ஆதரவு கொடுத்ததால், அதன் வசூல் ஒட்டுமொத்தமாக 75 கோடி ரூபாயை கடந்துள்ளது. இதுபோக தெலுங்கிலும் அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து, தனது 21 வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

- Advertisement -

கௌதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி தான் இந்த படத்தின் இயக்குனர். சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார். இதற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதமே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் 21 வது திரைப்படத்தின் சூட்டிங் பணிகள், நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கு மேலும் மூன்று மாதங்கள் ஆகும் என்பதால், ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் இணையும் திரைப்படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்குப் பிறகு மீண்டும் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

அதேசமயம் அவர் அயலான் இயக்குனர் ரவிக்குமாருடன் தான் இணைவார் என்றும் ஆனால் அயலான் படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். இதன் பிறகு நெல்சன் நடனம் மீண்டும் இணைய சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. அந்தக் காம்போ அப்படியே மீண்டும் இணைவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தொடர்ந்து குட் நைட் திரைப்படத்தின் இயக்குனர் விநாயக் உடனும் கதை கேட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் வெற்றிகரமாக முடிந்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளார்கள். பின்னர் வெங்கட் பிரபுவுடனும் சிவகார்த்திகேயன் இணைய உள்ளாராம். அது எஸ் கே வின் 25 வது திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் உடனும் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராம்குமார் தற்போது மூன்றாவது முறையாக விஷ்ணு விஷால் உடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதன்பிறகு அவர் தனுசை வைத்து இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த கமிட்மெண்டுகள் எல்லாம் முடிந்த பிறகு சிவகார்த்திகேயன் – ராம்குமார் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்