- Advertisement -
Homeபொழுதுபோக்குமிகவும் ஆபத்தான காட்சிகள் இருந்தன, காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பில் 4 முறை உயிர் தப்பித்தேன்…...

மிகவும் ஆபத்தான காட்சிகள் இருந்தன, காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பில் 4 முறை உயிர் தப்பித்தேன்… நடிகர் ரிஷப் ஷெட்டி சொன்ன பகீர் தகவல்!

- Advertisement -

கன்னடத்தில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான படம் காந்தாரா. கர்நாடகாவில் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி மகத்தான வெற்றியை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இப்போது இந்த படத்தின் தொடர்ச்சியாக காந்தாரா சாப்டர் 1 படத்தை நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கிறார்.

வருகிற அக்டோபர் 1ம் தேதி இந்த படம் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் காந்தாரா சாப்டர் 1 படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி பல விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

அப்போது ரிஷப் ஷெட்டி கூறியதாவது, காந்தாரா சாப்டர் 1 படத்தின் சில காட்சிகள் மிகவும் ஆபத்தானவையாக இருந்தன. அந்த நாட்களில் நான் வேண்டுமென்றே என் மனைவி பிரகதியை படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வரச் சொல்லி ஏமாற்றுவேன். கிட்டத்தட்ட மூன்று நான்கு முறை மரணத்தின் அருகே சென்று வந்தேன். தெய்வத்தின் உதவியால் மட்டுமே இன்று உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

கடந்த மூன்று மாதங்களாக நான் சரியாக தூங்கவில்லை. இந்த படத்துக்காக இடைவிடாமல் உழைத்து வருகிறேன். ஒவ்வொரு நடிகரும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் குழு உறுப்பினர்களும் இன்று நீங்கள் டிரெய்லரில் பார்க்கும் விஷயங்களுக்காக பங்களித்துள்ளனர். நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டோம்.

- Advertisement -

ஆனால் நம்பிக்கை கடின உழைப்பு மற்றும் தெய்வீக ஆதரவு எங்களை தொடர்ந்து வழி நடத்தியது. இந்த படத்தில் உண்மை இது கற்பனை எது என்பதை நீங்கள் அளவிட முடியாது. அதுதான் இந்த சினிமாவை வடிவமைத்தது. இந்த டிரெய்லர் வெறும் துணுக்கு மட்டுமே. முழு அனுபவமும் திரையரங்குகளில் காத்திருக்கிறது.

காந்தாரா படம் எனக்கு ஐந்து வருடங்களாக ஒரு உணர்வுபூர்வமான பயணமாக இருந்தது. முதல் பாகத்தில் இரண்டு வருடங்களும் இந்த படத்தில் 3 வருடங்களும் பணியாற்றியுள்ளேன். இந்த ஐந்து வருடங்களில் என் குடும்பத்தையும் குழந்தைகளையும் சரியாக கவனிக்க முடியவில்லை. இப்போது எனக்கு இருக்கும் ஒரே உணர்வு சினிமாவை நிறைவு செய்யும் உணர்வு தான் என்று நடிகர் ரிஷப் ஷெட்டி அந்த நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்