- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்... அதில் ஹீரோவாக நடிக்கப்போவது இவரா... அதுவும் அவரே சொல்லிட்டாரா......

விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்… அதில் ஹீரோவாக நடிக்கப்போவது இவரா… அதுவும் அவரே சொல்லிட்டாரா… கொளுத்துங்கடா பட்டாச…

- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து சாதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் நகைச்சுவை கதைக்களம் கொண்ட படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர், பின்னாளில் ஆக்சன் படங்களையும் தேர்வு செய்து அதற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொண்டார்.

 

- Advertisement -

இப்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அது மட்டுமல்ல சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் லாபத்தைக் கொடுப்பதால் அவருக்கென தனி மார்க்கெட் இங்கு இருக்கிறது. தற்போது அவர், கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

 

- Advertisement -

இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே கௌதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் படத்தை எடுத்திருந்தார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராணுவ பின்னணியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

 

மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை தான் இந்த திரைப்படம் பிரதிபலிப்பதாக பலர் கூறுகின்றனர். இது திரைப்படத்திற்காக கடும் உடற்பயிற்சியிலும் துப்பாக்கி பயிற்சியிலும் சிவகார்த்திகேயன் ஈடுபட்டிருந்தார். சூட்டிங் முடிந்திருக்கும் நிலையில், அமரன் படத்தில் பணியாற்றியவர்களுக்கு பிரியாணி விருந்து அளித்த அவர், அவர்களுக்கு விலை உயர்ந்த வாட்ச்சையும் பரிசாக வழங்கினார்.

 

இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் படத்திலும் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார். சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் அவருக்கு கல்லூரி மாணவர் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், கருடன் பட இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் குறித்து பேசி அவர், ஏற்கனவே அவரிடம் கதை ஒன்றை கூறியதாக தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் அந்த சம்பவம் குறித்து தற்போது சூரி மனம் திறந்து இருக்கிறார். அதில், சிவகார்த்திகேயன் தன்னிடம் கதை கூறியது உண்மைதான் என்றும், அவர் இயக்குனராகும் படத்தில் தன்னை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தார் என்றும் தெரிவித்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும், ஆனால் இப்போது நடிப்பதில் ஆர்வமுடன் இருப்பதாகவும் கூறி இருக்கிறார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி படத்தில் சூரி நடித்துள்ளார். இந்நிலையில் விரைவில் சிவகார்த்திகேயன் இயக்கத்தில் சூரி நடிப்பார் என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்