சமீபத்தில் சென்னையில் நடந்த திமுக தேர்தல் பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, நடிகர் விஜயுடன் நான் தலைவா நண்பன் மெர்சல் ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறேன். சின்ன பையனாக இருந்தே தெரியும். விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றதும் எனக்கு அதிசயமாக இருந்தது. தம்பி ரிசர்வ் டைப் ஆச்சே? ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட யாரிடமும் சரியாக பேச மாட்டார். அமைதியாக இருப்பார்.
அதனால் அரசியலுக்கு அவர் செட் ஆவாரா என்று சந்தேகமாக இருந்தது. அப்புறம் விஜய் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்து விட்டார். முதல் கூட்டத்தில் என்னுடைய கொள்கை தலைவர்கள் அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் என்று பேசினார். இதை பார்த்ததும் அட சூப்பரா பேசறாரே, இவர்தான் சரியான ஆள் என்று நான் நினைத்து விட்டேன்.
அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் கொள்கை தலைவர்களாக அவர்களோட சித்தாத்தங்களை மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கிறாரே என்று எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. நாம நினைச்ச மாதிரி இல்லே, அவர் அரசியலுக்கு வந்தது சரிதான் என்று ரொம்பவும் சந்தோஷமாக எனக்கு இருந்தது.
அப்புறம் பேச பேச தமிழக முதல்வரை ஸ்டாலின் சார் என்றார். அப்புறம் ஸ்டாலின் அங்கிள் என்றார். எனக்கு பகீர் என ஆகி விட்டது. இப்படி மரியாதையின்றி பேசறாரே? நாம பார்த்த விஜய் இப்படி இல்லையே? இப்படி எல்லாம் அவர் பேச மாட்டாரே? தன்னுடைய தயாரிப்பாளர் நஷ்டமடைய கூடாது என்பதற்காக பாடுபடுகிற ஒரு நல்ல நடிகராச்சே? அவரா இப்படி மரியாதையின்றி பேசுகிறாரே என்றாகி விட்டது.
இதுக்கு முன்னாடி தலைவா படம் ரிலீஸில் பிரச்னை ஆன போது, கொடநாட்டில் போய் ஜெயலலிதாவிடம், கையை கட்டி நின்னுக்கிட்டு அம்மா அம்மா ரொம்ப மன்னிச்சுக்குங்க அம்மா. எப்படியாவது இந்த தடவை என் படத்தை ரிலீஸ் பண்ணி விடுங்கம்மா என்று அந்த மாதிரி தான் மரியாதையாக பேசுவார் என்று நினைத்தேன்.
ஸ்டாலின் அங்கிள் என்று சொன்ன விஜய் ஜெயலலிதா மேடத்தை ஜெயலலிதா ஆண்ட்டி என்று சொல்லி இருந்தால் என்ன ஆகியிருக்கும்? என்ன நடந்திருக்கும்? ரோட்டோர கடையில் கொத்து பரோட்டா போடுவது போல் ஆக்கியிருப்பார்கள். அப்புறம் மேடையில் வந்து அண்ணன் நான் ரெடிதான் வரவா என்று எல்லாம் பாடியிருக்க முடியாது. தொட்டபெட்டா ரோட்டு மேல கொத்து பரோட்டா என்ற பாட்டை தான் பாடியிருக்க முடியும் என்று நடிகர் சத்யராஜ் பேசியிருக்கிறார்.





