- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவின் இடத்தை தட்டிப்பறித்த சிவகார்த்திகேயன்... பிரபல பெண் இயக்குனருடன் இணைந்தது உறுதியானது... நிச்சயம் அந்த நடிகர்...

சூர்யாவின் இடத்தை தட்டிப்பறித்த சிவகார்த்திகேயன்… பிரபல பெண் இயக்குனருடன் இணைந்தது உறுதியானது… நிச்சயம் அந்த நடிகர் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்…

- Advertisement -

நடிகர் சூர்யா தனது சிங்கம் 2 திரைப்படத்திற்கு பிறகு தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்தார். வெற்றி என்ற சொல்லை ஏற்றுவதற்கு அவருக்கு பல வருடங்கள் ஆகின. இந்த சமயத்தில்தான் அதை சாத்தியப்படுத்தினார் சுதா கொங்கரா. இருவர் கூட்டணியில் இணைந்து உருவானது சூரரைப் போற்று.

 

- Advertisement -

எப்படியாவது குறைந்த விலையில் விமான பயணத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என ஏங்கும் ஒரு ஆணின் கதையை பதிவு செய்திருந்தார் சுதா கொங்கரா. படத்தில் சூர்யா நடித்தார் என்று கூறுவதை விட வாழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தனது கேரக்டரை உள்வாங்கி, காட்சிகளில் மேஜிக் செய்தார் சூர்யா.

 

- Advertisement -

அவருக்கு போட்டியாக அபர்ணா பால முரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்தனர். மொத்தமாக, சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகவில்லை என்ற ஒரு ஏக்கம் மட்டும் ரசிகர்களிடம் இருந்தது. இந்தப் படத்திற்காக சூர்யா தேசிய விருதையும் பெற்றார்.

 

சுதா கொங்கராவின் கைகளுக்கும் தேசிய விருது சென்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி இணைவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. படத்திற்கு புறநானூறு என டைட்டில் வைத்தார் சுதா கொங்கரா. சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமே இதனை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோரும் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால் இந்த படத்திற்கான சூட்டிங் மட்டும் செல்லவே இல்லை. இதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. எதுவும் விளக்கம் அளிக்காமல் சூர்யா அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க சென்று விட்டார். சுதா கொங்கராவும் இந்த திரைப்படம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜாவுக்கும் அமீருக்கும் இடையேயான பிரச்சனையில் சுதா கொங்கரா தனது தரப்பு விளக்கத்தை அளித்ததே இந்த இடைவெளிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 

இது ஒரு புறமிருக்க சுதா கொங்கராவும் தனது அடுத்த படத்திற்கான கதையை நோக்கி சென்று விட்டார். அவர் துருவ் விக்ரமுடன் இணைவதாக பேசப்பட்டு வந்தது. தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது சிவகார்த்திகேயனுடன் சுதா இணைவது உறுதியாகி இருக்கிறது. தனது புறநானூறு திரைப்படத்தை தான் அவர் சிவகார்த்திகேயனை வைத்து எடுக்கப் போகிறாராம். ஆகாஷ் கிருஷ்ணன் என்பவர் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

- Advertisement -

சற்று முன்