- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவருக்கு அந்த விஷயம் சுத்தமாக பிடிக்காது, அதனால் நான் அதை செய்வதில்லை - தன் குடும்பம்...

அவருக்கு அந்த விஷயம் சுத்தமாக பிடிக்காது, அதனால் நான் அதை செய்வதில்லை – தன் குடும்பம் குறித்து ஓப்பனாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான அமரன் படம் ரூ. 300 கோடி வசூலை கடந்து வெற்றிப் படமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அவர் நடிப்பில் வெளியாகி ரூ. 300 கோடி வசூலில் கடந்த முதல் படம் அமரன் என்பது குறிப்பிடத்தக்கது. அமரனுக்கு கிடைத்த அபார வெற்றி, படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனையும் உற்சாகப்படுத்தி உள்ளது.

இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்து, டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் தனது 25வது படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விஷால் அல்லது ஜெயம் ரவி வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

அமரன் படம் தந்த அபார வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ. 55 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல் இந்த படத்தில் இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் நடித்துள்ள சாய் பல்லவியும் தனது சம்பளத்தை ரூ. 3 கோடியில் இருந்து ரூ. 6 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன், தனது அக்கா மகள் ஆர்த்தியை தான் திருமணம் செய்துக்கொண்டு இருக்கிறார். இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும், குகன்தாஸ், பவன் தாஸ் என்ற 2 மகன்களும் உள்ளனர். பெரும்பாலும் தனது திரைப்பட விழாக்களில், தனது மனைவி, பிள்ளைகளுடன் பங்கேற்பதை சிவகார்த்திகேயன் வழக்கமாக வைத்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகையில், எனது முதல் மகன் குகன் காசுக்கு இனிப்பு பொருட்கள் சுத்தமாக பிடிக்காது ஒருமுறை ஐஸ்கிரீம் ஊட்டி விட்டபோது அழுதுவிட்டான் இன்னும் சொல்லப்போனால் பிறந்த நாளில் கேக் வெட்டும் போது கூட அவன் இனிப்பு சாப்பிடுவதில்லை.

அதே நேரத்தில் காரமான உணவு என்றால் விரும்பி சாப்பிடுவான் அதனால் என் மகனுக்கு பிடித்தமான கார உணவுகளை வாங்கிக் கொடுத்து வருகிறேன் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். தன் மகனின் சாப்பிடும் பழக்கம் குறித்து சிவகார்த்திகேயன் வெளிப்படையாக, யதார்த்தமாக பேசியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்