- Advertisement -
Homeபொழுதுபோக்குவெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க மறுத்த நடிகர் சிவகார்த்திகேயன் - இப்படி ஒரு காரணமும் இருக்கிறதா?...

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க மறுத்த நடிகர் சிவகார்த்திகேயன் – இப்படி ஒரு காரணமும் இருக்கிறதா? – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம் – தி கோட் என்ற படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கினார். இந்த படம் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியானது. இந்த படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் நடிகர் விஜயுடன் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

அந்த ஒரு காட்சியில் சிவகார்த்திகேயனிடம், துப்பாக்கியை பிடிங்க சிவா என நடிகர் விஜய் பேசிய டயலாக் பெரிய வரவேற்பை எஸ்கே ரசிகர்களிடம் பெற்றது. இனி சினிமாவை விட்டு போகும் விஜய் தன்னுடைய இடத்தில் சிவகார்த்திகேயன் வரப்போவதை சொல்லிவிட்டார் என்று இணையத்தில் பரவி பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்கு நடிகர் சிவகார்த்திகேயனே மறுப்பு தெரிவித்து விஜய் இடத்தை யாரும் பிடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

- Advertisement -

அப்போது அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த நிலையில் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்க இருந்தார். இந்த படம் சயின்ஸ்பிக்சன் படம் என்றும் கூறப்பட்டது. இதற்காக வெங்கட்பிரபு சிவகார்த்திகேயன் இருவரும் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று சிஜி சார்ந்த பணிகளை கூட செய்து விட்டு வந்தனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் வெங்கட்பிரபு படத்தை நிராகரித்த நடிகர் சிவகார்த்திகேயன் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்தார். அதன்பிறகு இப்போது தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இன்னும் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவே வேண்டாம் என்று நடிகர் சிவகார்த்தியேகன் முடிவெடுக்க இதுதான் முக்கிய காரணம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்துக்காக சிவகார்த்திகேயன் தர வேண்டிய கால்ஷீட் 115 நாட்கள். மேலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் 5 மாதங்கள், ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் 3 மாதங்கள் என ஏறக்குறைய ஒரு ஆண்டு வரை வெங்கட்பிரபு கால அவகாசம் எடுத்துள்ளார்.

அதாவது இந்த படம் உருவானால் ஒரு ஆண்டுக்கு எந்த படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க முடியாது. இந்த படமும் அடுத்த 2027ம் ஆண்டு மத்தியில்தான் வெளியாகும். இப்படி ஓராண்டு காலம் தனது எந்த படமும் வரவில்லை என்றால், சிவகார்த்திகேயனுக்கு மார்க்கெட் இல்லை என்கிற தவறான தகவல் பரவக்கூடும். ஆண்டுக்கு 2 படங்களாவது தந்தால்தான் இமேஜை பாதிப்பின்றி தொடர முடியும் என்பதால்தான் வெங்கட்பிரபு படத்தை எஸ்கே நிராகரித்தாா் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்