- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்கள் இருப்பாங்க, நீங்க சினிமாவில் இருப்பீங்களா? நடிகர் சிவகார்த்திகேயனை பார்த்து கேட்ட அந்த தயாரிப்பாளர் யார்?...

ரசிகர்கள் இருப்பாங்க, நீங்க சினிமாவில் இருப்பீங்களா? நடிகர் சிவகார்த்திகேயனை பார்த்து கேட்ட அந்த தயாரிப்பாளர் யார்? – நிர்வாகிகள் கூட்டத்தில் பதிலடி தந்த எஸ்கே!

- Advertisement -

சமீபத்தில் நடந்த ரசிகர்கள் நற்பணி இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, இந்த நற்பணி இயக்கும் இதில் நீங்கள் செய்கிற நல்லது அதில் எதுவுமே நமக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. இதுல யாருக்கும் யாரை விட நாம பெரியவங்க என்று காட்டுவதற்கோ இல்லை. யாரையும் எதிர்க்கறதுக்கோ நாமதான் பெருசுன்னு காட்டறத்துக்கோ அப்படி இல்லை.

நீங்களும் அப்படி செய்றது இல்லை என்பது எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். அதுதான் இங்கு ரொம்ப ரொம்ப முக்கியம். ஏன்னா இங்க ஒவ்வொண்ணத்துக்கும் ஒரு காரணம் தேடி கண்டுபிடிப்பாங்க. அது மாதிரி இல்லாமல் இருக்கிறதே சந்தோஷம். அதை தாண்டி நற்பணி இயக்கம் என்பதற்கு இரண்டு விஷயம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

அதில் ஒண்ணு ஒரு இயக்கம் என்றால் அது தொடர்ந்து இயங்குறதுக்கு கட்டமைப்பு கட்டுப்பாடு இது ரெண்டும் ரொம்ப ரொம்ப முக்கியம். கட்டமைப்பு அதை நீங்க எல்லாம் சிறப்பா செஞ்சுட்டு இருக்கீங்க. ஒரே மாதிரியான எண்ணத்தில் இருக்கக்கூடிய ஒரே மாதிரியாக இயங்கக்கூடிய தம்பிகளை நாம் கண்டுபிடித்து நம் இயக்கத்தில் இணைத்திருக்கிறோம்.

நான் ஆரம்பத்தில் ஒரு சில படங்கள் பண்ணியிருந்த டைம்ல நடந்தது இது. அப்போ நடந்த ஒரு ஷூட்டிங்குக்கு என்னை பார்க்கறதுக்காக கொஞ்சம் பேர் ஒரு 10 15 ரசிகர்கள் அங்கு வந்திருந்தாங்க. அவங்களை பார்த்து பேசிட்டு நான் வரும்போது அங்கு இருந்த புரடியூசர் ஒருவர், யார் சிவா இவங்க, எதுக்கு வந்திருக்காங்கன்னு என்கிட்ட கேட்டார்.

அவர்கள் என்னோட ரசிகர்கள், பார்க்க வந்திருக்காங்க சார் என்று சொன்னேன். ஓ ரசிகர்கள் எல்லாம் உங்களுக்கு இருக்காங்களா? என்று கேட்டார். ஆமா சார், நிறைய ரசிகர்கள் ஆசையா வந்து பார்க்கறாங்க என்று சொன்னேன். சிவா இதெல்லாம் ஆரம்பத்துல இருக்கிற க்ரேஷ்ல கொஞ்ச நாளைக்கு வருவாங்க என்றார். இல்லே சார் தொடர்ந்து வருவாங்க என்று சொன்னேன்.

சிவா உங்களுக்கு அனுபவம் இல்லே, அதுதான் புரியலே அதெல்லாம் கொஞ்ச நாள்தான் வருவாங்க என்று மீண்டும் சொன்னார். இதெல்லாம் எதுக்கு? நீங்க பாட்டுக்கு வேலைய பாருங்க என்றார். இல்லே சார், அவங்க கூட வருவாங்க என்று உறுதியா சொன்னேன். அதற்கு அவர், அவங்க வருவாங்க சரி, அவங்க இருப்பாங்க சாி, நீங்க இண்டஸ்ட்ரியில் இருப்பீங்களா? அது பார்த்துக்கங்க முதலில் என்றார். இப்போ 2026ல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நற்பணி இயக்க நிர்வாகிகளோடு இந்த சந்திப்பு நடக்குது என்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். அந்த புரடியூசர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

சற்று முன்