நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது பராசக்தி மதராஸி ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்து குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கும் படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. கதையை கேட்டு ஏற்கனவே சிவகார்த்திகேயன் ஓகே சொன்ன நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்த்த நிலையில், அந்த படத்தை சிவகார்த்திகேயன் டிராப் செய்ய சொல்லி விட்டதாக தகவல் வெளியானது.
இயக்குனர் புஷ்கர் காயத்ரி சொன்ன ஒரு கதை மிகவும் பிடித்துப் போனால், இயக்குனர் விநாயக் சந்திரசேகர் படத்தை சிவகார்த்திகேயன் பெண்டிங் வைத்ததாக கூறப்பட்ட நிலையில், உண்மையான காரணம் குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கும் படத்தின் கதைக்களம் அப்பா, மகன் இருவரது பாசப் போராட்டத்தை மையப்படுத்தியது. அதனால் இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்க முடிவு செய்யப்பட்டது. அவர் நடித்தால்தான் இந்த கேரக்டர் நல்ல வெயிட்டாக இருக்கும் என்றும் சிவகார்த்திகேயன் ஆசைப்பட்டுள்ளார்.
ஆனால் நடிகர் மோகன்லால் இப்போது மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அதனால் அவர் வருகிற 2026ம் ஆண்டில் மார்ச் மாதத்துக்கு பிறகுதான் கால்ஷீட் தர முடியும் என்று உறுதியாக கூறிவிட்டார். சத்யராஜ் ராஜ்கிரண் பிரகாஷ்ராஜ் போன்ற சீனியர் நடிகர்கள் அந்த அப்பா கேரக்டரில் நடிக்க சிவகார்த்திகேயன் விரும்பவில்லை. அதனால் மலையாள நடிகர் மோகன்லால்தான் அப்பா கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதில் சிவகார்த்திகேயன் பிடிவாதமாக இருக்கிறார்.
இந்த ஒரு முக்கியமான காரணத்தால் தான் இந்த படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மோகன்லால் தனது படத்தில் நடித்தால் கேரளாவிலும் ஓவர்சீஸ்சிலும் இன்னும் படத்துக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று சிவகார்த்திகேயன் கணக்கு போடுகிறார். மேலும் ஜில்லா படத்தில் விஜயுடன் மோகன்லால் இணைந்து நடித்திருந்த நிலையில், தன்னுடனும் அவர் நடிக்க சிவகார்த்திகேயன் ஆசைப்படுகிறார்.
இந்த காரணங்களால்தான் குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கும் படத்தை நிறுத்தி வைத்துள்ளனர். மோகன்லால் கால்ஷீட் தந்த பிறகு அந்த படத்தை துவங்க உள்ளனர். மேலும் அதற்கு முன்னதாக இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில்தான் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். புஷ்கர் காயத்ரி இயக்கும் படத்தில் அடுத்த ஆண்டில்தான் எஸ்கே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.





